கந்தகார் படுகொலை

கந்தகார் படுகொலை என்பது ஆப்கானித்தானில் உள்ள கந்தகார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மார்ச்சு 11, 2012 அன்று விடியற்காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நிகழ்வை குறிக்கிறது. இப்படுகொலையில் பதினாறு குடிமக்கள் (ஒன்பது சிறார்களும் நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்) கொல்லப்பட்டனர். சில உடல்கள் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினொறு உறுப்பினர்கள் அடங்குவர்.

கந்தகார் படுகொலை
ஆப்கானித்தானில் உள்ள கந்தகார் மாகாணம். பன்ஞ்வாய் மாவட்டம்
மாகாணத்தில் மத்திய மேற்கில் அமைந்துள்ளது
இடம்பன்ஞ்வாய் மாவட்டம், கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான்
நாள்11 மார்ச்சு 2012 (2012-03-11)
03:00 AFT (ஒசநே+04:30)
தாக்குதல்
வகை
மூன்று வீடுகளில் அத்துமீறி நுழைதல், கண்மூடித்தனமாக கொல்லுதல், படுகொலை
இறப்பு(கள்)16 குடிமக்கள்
காயமடைந்தோர்5
Victimஒன்பது குழந்தைகள், 4 ஆண்கள், மற்றும் 3 பெண்கள்.[1]
தாக்கியோர்
  • ஒரு அமெரிக்க இராணுவ வீரர் (Staff Sgt. Robert Bales) (அதிகாரிகள் கூற்றுபடி)
  • ஒன்று அல்லது மேற்பட்ட இராணுவ வீர்ர்கள் (நேரில் கண்டவர்களின் அடிப்படையில்)
  • 20 அமெரிக்க இராணுவ வீரர்கள் வரை (ஆப்கானித்தான் நாடாளுமன்ற குழுவின் கூற்றுபடி)[2]

இப்படுகொலையை செய்ததாக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த செர்ஜியன்ட்[3] ஒருவர் அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டார். அவ்வீரர் குவைத்திற்கு மார்ச்சு 13, 2012 அன்று கொண்டு செல்லப்பட்டு பின்னர் கான்சாசில் உள்ள இராணுவ தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.. மார்ச்சு 16,2012 அன்று அவரது பெயர் அடையாளம் காணப்பட்டது[4].

மேற்கோள்கள் தொகு

  1. "The inside story of how a rogue soldier massacred 16 Afghanis". News Limited. 13 March 2012 இம் மூலத்தில் இருந்து 14 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120314014554/http://www.news.com.au/world/how-a-rogue-us-sniper-shot-and-killed-16-afghans/story-e6frfkyi-1226297936014. பார்த்த நாள்: 14 March 2012. 
  2. "Up to 20 US troops executed Panjwai massacre: probe". Pajhwok Afghan News. 15 March 2012 இம் மூலத்தில் இருந்து 12 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112034325/https://www.pajhwok.com/en/2012/03/15/20-us-troops-executed-panjwai-massacre-probe. 
  3. http://www.aljazeera.com/news/asia/2012/03/201231622475184135.html
  4. Gye, Hugo (March 16, 2012). "Afghan massacre: US soldier identified as Robert Bales". Mail Online.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தகார்_படுகொலை&oldid=3759187" இலிருந்து மீள்விக்கப்பட்டது