கந்தசாமி பிரபு
கந்தசாமி பிரபு (Kanthasamy Prabu, பிறப்பு: 7 மார்ச் 1985) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
கந்தசாமி பிரபு | |
---|---|
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
பெரும்பான்மை | 14,856 விருப்பு வாக்குகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச்சு 7, 1985 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி |
வாழிடம்(s) | இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகந்தசாமி பிரபு மட்டக்களப்பு மகாசனக் கல்லூரி, மட்டக்களப்பு மெதடிசுத மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். தேசிய கணக்கியல் உயர் டிப்புளோமா பட்டம் பெற்றவர். கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதிக் கணக்காளராகப் பணியாற்றியவர்.
அரசியலில்
தொகுஇவர் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்படுகிறார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்படவில்லை. 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு 14,856 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் சார்பாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு வேட்பாளர் இவர் ஆவார்.[2][3][4]
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2020 நாடாளுமன்றம் | மட்டக்களப்பு மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | தெரிவு செய்யப்படவில்லை | |||
2024 நாடாளுமன்றம் | மட்டக்களப்பு மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | 14,856 | தெரிவு[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Directory of Members: Kanthasamy Prabu, M.P." Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2024.
- ↑ "Batticaloa District preferential vote results". Ada Derana. 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
- ↑ "Batticaloa District preferential vote results". Sri Lanka Mirror. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
- ↑ "Sri Lanka's NPP secures record 'super majority' in parliament". Tamil Guardian. 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
- ↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/.