இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல்கள் (Parliamentary elections) 17-வது நாடாளுமன்றத்திற்காக (இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றத்திற்காக) 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2024 நவம்பர் 14 இல் நடைபெற்றது. இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் 2024 செப்டம்பர் 24 இல் கலைக்கப்பட்டது.[3][4][5] புதிய நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 2024 அக்டோபர் 4 முதல் 11 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.[6][7]
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை நாடாளுமன்றத்தின் அனைத்து 225 இருக்கைகள் அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 17,140,354[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 64.63% (▼ 11.26%)[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அறிவிக்கப்பட்டது | 100% | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
இத்தேர்தல் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் வெற்றியாகவும்,[8] இலங்கை அரசியலில் ஒரு வரலாற்று மாற்றமாகவும் கருதப்பட்டது. முதல் தடவையாக ஒரு சிறப்புப் பெரும்பான்மையை (159) அடைய இக்கட்சியால் முடிந்தது. அத்துடன், முதன்முறையாக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் அரசியல் கட்சி அல்லாத ஒரு கட்சியாக அது வெற்றி பெற்றது.[9]
தேர்தலுக்குப் பின், புதிய நாடாளுமன்றம் 2024 நவம்பர் 21 இல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.[10][11]
பின்னணி
தொகுதேர்தலுக்கு முந்தைய அரசியல் சூழல்
தொகு2020 ஆகத்து 5 அன்று நடைபெற்ற 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச தலைமையிலான சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றது.[12] அவரது ஆட்சிக் காலத்தில், அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கீழ் அரசாங்கம் கோவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள், 2022 அரசியல் நெருக்கடி உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டது.[13]
இந்த நிகழ்வுகள் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி அரசுத்தலைவர் பதவியைத் துறக்க வழிவகுத்தது, அதே நேரத்தில் மகிந்த ராசபக்சவும் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[14][15] ரணில் விக்கிரமசிங்க தொடக்கத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டார், பின்னர் கோத்தபய ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து பதில் அரசுத்தலைவரானார். 2022 சூலை 20 இல் நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில், கோட்டாபயவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்யும் பணிக்காக விக்கிரமசிங்க இலங்கையின் 9-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16]
2024 செப்டெம்பர் 21 அன்று நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில், அனுர குமார திசாநாயக்க தனது முக்கிய போட்டியாளர்களான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைத் தோற்கடித்து இலங்கையின் 10-ஆவது அரசுத்தலைவராக ஆனார்.[17]
1981 ஆம் ஆண்டின் 1-ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி, இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்றாலும், அரசுத்தலைவர் அதன் முதல் கூட்டத்திலிருந்து இரண்டரை ஆண்டுகளின் பின்னர் அல்லது நாடாளுமன்றத்தில் தீர்மானம் பெற்ற பிறகு அதைக் கலைக்க முடியும். ஆகத்து 2025 இல் திட்டமிடப்பட்டிருந்த போதும், திசாநாயக்க, தனது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றி, 2024 செப்டம்பர் 21 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[18][19][20]
தேர்தல் முறைமை
தொகுநாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 196 உறுப்பினர்கள் 22 பல-உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் மாவட்டங்களில் இருந்து திறந்த பட்டியல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் கட்சிப் பட்டியலில் மூன்று வேட்பாளர்களை விருப்பத் தெரிவு மூலம் வரிசைப்படுத்தலாம்.[21] ஏனைய 29 இடங்கள் தேசியப் பட்டியலிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு, கட்சியின் செயலாளர்களால் நியமிக்கப்பட்ட பட்டியல் அங்கத்தவர்கள் மற்றும் கட்சி பெறும் நாடளாவிய விகிதாசார வாக்குகளின்படி இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஒவ்வொரு பிரகடனமும் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும், வேட்புமனு தாக்கல் காலம், தேர்தல் தேதி ஆகியனவும் குறிப்பிடப்பட வேண்டும். புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் முந்தைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நிகழ வேண்டும்.[22]
18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதாரண வதிவாளராக இருக்கின்றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம்.[23] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்வொரு வாக்காளரும் தத்தம் ஆளடையாளத்தை செல்லுபடியான ஆளடையாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூபிக்க வேண்டும்.[23] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[23]
தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கீட்டில் மாற்றங்கள்
தொகு25 செப்டம்பர் 2024 அன்று, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமிருந்து தேவைப்படும் வைப்புத் தொகை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வைப்புத் தொகை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.[24][25]
உறுப்பினர் பங்கீட்டில் மாற்றங்கள்: 2020 முதல் 2024 வரை
தொகுஇலங்கைத் தேர்தல் ஆணையம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேச்சைக் குழுக்களிடமிருந்து தேவைப்படும் வைப்புத்தொகை பற்றிய விவரங்களை வெளியிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.[26][27][1]
மாவட்டம் | பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் |
ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை | |||
---|---|---|---|---|---|
2020 | 2024 | 2020 | 2024 | மாற்றம் (+/-) | |
அம்பாறை | 513,979 | 555,432 | 7 | 7 | – |
அனுராதபுரம் | 693,634 | 741,862 | 9 | 9 | – |
பதுளை | 668,166 | 705,772 | 9 | 9 | – |
மட்டக்களப்பு | 409,808 | 449,686 | 5 | 5 | – |
கொழும்பு | 1,709,209 | 1,765,351 | 19 | 18 | ▼ 1 |
காலி | 867,709 | 903,163 | 9 | 9 | – |
கம்பகா | 1,785,964 | 1,881,129 | 18 | 19 | 1 |
அம்பாந்தோட்டை | 493,192 | 520,940 | 7 | 7 | – |
யாழ்ப்பாணம் | 571,848 | 593,187 | 7 | 6 | ▼ 1 |
களுத்துறை | 972,319 | 1,024,244 | 10 | 11 | 1 |
கண்டி | 1,129,100 | 1,191,399 | 12 | 12 | – |
கேகாலை | 684,189 | 709,622 | 9 | 9 | – |
குருணாகல் | 1,348,787 | 1,417,226 | 15 | 15 | – |
மாத்தளை | 407,569 | 429,991 | 5 | 5 | – |
மாத்தறை | 659,587 | 686,175 | 7 | 7 | – |
மொனராகலை | 372,155 | 399,166 | 6 | 6 | – |
நுவரெலியா | 577,717 | 605,292 | 8 | 8 | – |
பொலன்னறுவை | 331,109 | 351,302 | 5 | 5 | – |
புத்தளம் | 614,374 | 663,673 | 8 | 8 | – |
இரத்தினபுரி | 877,582 | 923,736 | 11 | 11 | – |
திருகோணமலை | 288,868 | 315,925 | 4 | 4 | – |
வன்னி | 287,024 | 306,081 | 6 | 6 | – |
தேசியப் பட்டியல் | இல்லை | இல்லை | 29 | 29 | – |
மொத்தம் | 16,263,885 | 17,140,354 | 225 | 225 | – |
மூலம்:இலங்கை தேர்தல் ஆணையம் (Election Commission)[12][17][1] |
தேர்தலுக்கு முந்தைய நிலவரம்
தொகுஅண்மைய இலங்கைத் தேர்தல் முடிவுகள் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேர்தல் திகதிகள் | தேசிய மக்கள் சக்தி | ஐக்கிய மக்கள் சக்தி | ஐக்கிய தேசியக் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி (இ.சு.ம.கூ) |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | மக்கள் கூட்டணி | சுயேச்சைகள் | |||||||
வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | |
2024 அரசுத்தலைவர்[b] | 5,634,915 | 42.31 | 4,363,035 | 32.76 | 2,299,767 | 17.27 | 342,781 | 2.57 | இல்லை [c] | இல்லை | இல்லை [d] | இல்லை | 407,473 | 3.06 |
2020 நாடாளுமன்றம் | 445,958 | 3.84 | 2,771,980 | 23.90 | 249,435 | 2.15 | 6,853,690 | 59.09 | 327,168 | 2.82 | இல்லை [e] | இல்லை | 223,622 | 1.93 |
2018 உள்ளூராட்சி | 710,932[f] | 5.75 | இல்லை [g] | இல்லை | 3,640,620[h] | 29.42 | 5,006,837[i] | 40.47 | 337,877 | 2.73 | இல்லை [j] | இல்லை | 374,132 | 3.02% |
தேர்தலுக்கு முந்தைய இலங்கை அரசியல் வரைபடம் | ||||||
---|---|---|---|---|---|---|
இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2024 | இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020 | |||||
ஒவ்வொரு தேர்தல் மாவட்டம் அல்லது நகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகின்றனர் ■ தேமக ■ ஐமக ■ ததேகூ ■ இ.பொ.ச.மு ■ ஏனைய கட்சிகள் |
தேர்தல் அட்டவணை
தொகுதிகதி | நாள் | நிகழ்வு |
---|---|---|
21 செப்டம்பர் 2024 | சனிக்கிழமை | 2024 அரசுத்தலைவர் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். |
24 செப்டம்பர் 2024 | செவ்வாய்க்கிழமை | அரசுத்தலைவர் திசாநாயக்க நாடாளுமன்றத்தைக் கலைத்து நாடாளுமன்றத்திற்கான தேர்தலை அறிவித்தார்.[28] |
4-10 அக்டோபர் 2024 | வேட்பு மனுக்கள் ஏற்கப்படுதல்[29] | |
14 நவம்பர் 2024 | வியாழக்கிழமை | தேர்தல் நாள் |
போட்டியிட்ட கட்சிகள்
தொகுகுறி. | கட்சி | சின்னம் | கொள்கை | தலைவர் | 2020-இல் வென்ற இடங்கள் | தேர்தலுக்கு முந்தைய நிலவரம் | நிலை | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்கு (%) | இருக்கைகள் | ||||||||
இபொசமு | இலங்கை பொதுசன முன்னணி | சிங்கள பௌத்த தேசியம் வலதுசாரி பரப்பியம் |
மகிந்த ராசபக்ச | 59.09% | 145 / 225
|
106 / 225
|
அரசு | ||
ஐமச | ஐக்கிய மக்கள் சக்தி | தாராளவாத பழமையியம் முற்போக்குவாதம் |
சஜித் பிரேமதாச | 23.90% | 54 / 225
|
72 / 225
|
எதிர்க்கட்சி | ||
இதக | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியம் | சிவஞானம் சிறீதரன் (உறுதிப்படுத்தப்படவில்லை) |
2.82% | 10 / 225 [k]
|
6 / 225
|
எதிர்க்கட்சி | ||
ஜததேகூ | சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி | தமிழ்த் தேசியம் | இல்லை | இல்லை | 4 / 225
|
எதிர்க்கட்சி | |||
தேமச | தேசிய மக்கள் சக்தி | சனநாயக சோசலிசம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரி பரப்பியம் |
அனுர குமார திசாநாயக்க | 3.84% | 3 / 225
|
3 / 225
|
எதிர்க்கட்சி | ||
ததேமமு | தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி | தமிழ்த் தேசியம் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | 0.58% | 2 / 225
|
2 / 225
|
எதிர்க்கட்சி | ||
ஈமசக | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | டக்ளஸ் தேவானந்தா | 0.53% | 2 / 225
|
2 / 225
|
அரசு | |||
புசமு | புதிய சனநாயக முன்னணி | ரணில் விக்கிரமசிங்க | இல்லை | இல்லை | இல்லை | புதியது |
போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை
தொகுமொத்தம் 8,821 வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் 2024 அக்டோபர் 12 அன்று ஒரு ஊடக வெளியீட்டில் அறிவித்தது. இதில் 5,564 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகவும், 3,257 பேர் சுயேச்சைகளாகவும் போட்டியிட்டனர்.[30][31]
வாக்களிப்பு
தொகுஅஞ்சல் வாக்களிப்பு
தொகுதேர்தல் ஆணையம் முதலில் 2024 அக்டோபர் 1-8 வரை அஞ்சல் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது, ஆனால் காலக்கெடு 2024 அக்டோபர் 10 இசீநே 24:00 வரை நீடிக்கப்பட்டது. தேர்தல் கடமைகளில் ஈடுபடும் முன்-அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வசதி கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்கள் 2024 அக்டோபர் 30, நவம்பர் 1, நவம்பர் 4, நவம்பர் 7-8 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையம் வழங்கிய அட்டவணையின்படி வாக்களித்தனர்.[32][33]
முடிவுகள்
தொகுதேசிய முடிவுகள்
தொகுகட்சி | வாக்குகள் | % | Seats | |||||
---|---|---|---|---|---|---|---|---|
மாவட்டம் | +/– | |||||||
தேசிய மக்கள் சக்தி | 68,42,223 | 66.03 | 159 | |||||
ஐக்கிய மக்கள் சக்தி | 19,66,875 | 18.98 | 40 | ▼ | ||||
புதிய சனநாயக முன்னணி | 4,93,359 | 4.76 | 5 | – | ||||
இலங்கை பொதுசன முன்னணி | 3,50,287 | 3.38 | 3 | ▼ | ||||
இலங்கைத் தமிழரசுக் கட்சி | 2,52,548 | 2.44 | 8 | – | ||||
சர்வசன அதிகாரம் | 1,77,954 | 1.72 | 1 | புதியது | ||||
ஐக்கிய சனநாயகக் குரல் | 83,488 | 0.81 | – | புதியது | ||||
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 77,116 | 0.74 | 3 | – | ||||
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 7,264 | 0.07 | 1 | – | ||||
மக்கள் போராட்டக் கூட்டணி | 7,242 | 0.07 | – | புதியது | ||||
சனநாயக இடது முன்னணி | 6,588 | 0.06 | – | – | ||||
தமிழ் மக்கள் கூட்டணி | 6,359 | 0.06 | – | – | ||||
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி | 6,066 | 0.06 | 1 | – | ||||
சனநாயகத் தேசியக் கூட்டணி | 6,039 | 0.06 | – | – | ||||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 4,726 | 0.05 | – | – | ||||
தேசிய சனநாயக முன்னணி | 4,712 | 0.05 | – | புதியது | ||||
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு | 4,626 | 0.04 | – | புதியது | ||||
தெவன பரப்புரை | 3,594 | 0.03 | – | புதியது | ||||
சன சத பெரமுன | 2,742 | 0.03 | – | புதியது | ||||
புதிய சுயேச்சை முன்னணி | 2,131 | 0.02 | – | புதியது | ||||
ஐக்கிய தேசியக் கட்சி | 1,981 | 0.02 | 1 | – | ||||
அருனலு மக்கள் கூட்டமைப்பு | 1,401 | 0.01 | – | – | ||||
தேசிய மக்கள் கட்சி | 1,058 | 0.01 | – | New | ||||
அகில இலங்கை மக்கள் காங்கிரசு | 1,008 | 0.01 | 1 | – | ||||
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி | 989 | 0.01 | – | புதியது | ||||
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 738 | 0.01 | – | – | ||||
தேசப்பற்று மக்கள் சக்தி | 646 | 0.01 | – | புதியது | ||||
இலங்கைத் தொழிற் கட்சி | 634 | 0.01 | 1 | – | ||||
இலங்கை சோசலிசக் கட்சி | 406 | 0.00 | – | – | ||||
ஜாதிக சங்வர்தன பெரமுன | 358 | 0.00 | – | புதியது | ||||
தமிழர் விடுதலைக் கூட்டணி | 285 | 0.00 | – | – | ||||
நவ சமசமாஜக் கட்சி | 269 | 0.00 | – | – | ||||
லிபரல் சனநாயகக் கட்சி | 264 | 0.00 | – | – | ||||
ஈரோஸ் சனநாயக முன்னணி | 249 | 0.00 | – | புதியது | ||||
அப்பே சனபல கட்சி | 239 | 0.00 | – | புதியது | ||||
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 183 | 0.00 | – | – | ||||
அகில இலங்கை தமிழ் மகாசபை | 158 | 0.00 | – | புதியது | ||||
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி | 151 | 0.00 | – | புதியது | ||||
சோசலிச சமத்துவக் கட்சி | 61 | 0.00 | – | – | ||||
எக்சத் லங்கா பொதுசன கட்சி | 50 | 0.00 | – | புதியது | ||||
சமபிம கட்சி | 34 | 0.00 | – | புதியது | ||||
ஐக்கிய சோசலிசக் கட்சி | 21 | 0.00 | – | – | ||||
புதிய இலங்கை சுதந்திரக் கட்சி | 20 | 0.00 | – | – | ||||
சனநாயக ஐக்கியக் கூட்டணி | 16 | 0.00 | – | – | ||||
சுதந்திர மக்கள் முன்னணி | 9 | 0.00 | – | புதியது | ||||
சனநாயகக் கட்சி | 8 | 0.00 | – | – | ||||
லங்கா சனதா கட்சி | 5 | 0.00 | – | புதியது | ||||
ஐக்கிய அமைதிக் கூட்டணி | 2 | 0.00 | – | புதியது | ||||
சுயேச்சைக் குழுக்கள் | 44,643 | 0.43 | 1 | – | ||||
மொத்தம் | 1,03,61,825 | 100.00 | 196 | – | ||||
பதிவான வாக்குகள் | 1,71,40,354 | – | ||||||
மூலம்: இலங்கை தேர்தல் ஆணையம்,[34] அத தெரண[35] |
மாவட்ட வாரியாக முடிவுகள்
தொகுதேமச வென்ற மாவட்டங்கள் |
இதக வென்ற மாவட்டங்கள் |
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ இலங்கை சனாதிபதி
- ↑ முதற்சுற்று முடிவுகள்
- ↑ போட்டியிடவில்லை
- ↑ போட்டியிடவில்லை
- ↑ போட்டியிடவில்லை
- ↑ மக்கள் விடுதலை முன்னணி மட்டும்
- ↑ ஐதேகவின் ஒரு பகுதி
- ↑ ஐ.தேமு தலைமையில் கூட்டணி
- ↑ ஏனைய கட்சிகளுடன் கூட்டணி
- ↑ போட்டியிடவில்லை
- ↑ 2020 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) வென்ற இடங்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Number of members to be returned for each Electoral District as required under Article 98(8) of the Constitution – After certification of 2024(1) Supplementory Electoral Register (2024.02.01 – 2024.05.31) as at 2024.07.08" (PDF). Election Commission of Sri Lanka. October 2024. Archived (PDF) from the original on 17 October 2024. பார்க்கப்பட்ட நாள் 17 October 2024.
- ↑ https://www.adaderana.lk/news.php?nid=103406
- ↑ "Proclamation by the President" (PDF). The Gazette Extraordinary. Department of Government Printing. 24 September 2024. Archived (PDF) from the original on 24 September 2024. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
- ↑ Balasuriya, Darshana Sanjeewa (24 September 2024). "General election on November 14". Daily Mirror. Archived from the original on 24 September 2024. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
- ↑ Ng, Kelly (24 September 2024). "Sri Lanka's new president dissolves parliament". BBC. Archived from the original on 24 September 2024. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
- ↑ Farzan, Zulfick (4 October 2024). "Nominations Open for 2024 Parliamentary Election". News First. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ Fernandopulle, Sheain (11 October 2024). "Nomination period for General Election ends today". Daily Mirror. பார்க்கப்பட்ட நாள் 11 October 2024.
- ↑ "Sri Lanka: Left-leaning leader's coalition secures landslide victory". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-15.
- ↑ Radhakrishnan, R. K. (2024-11-15). "Sri Lanka Election Results 2024: JVP Wins Parliament Control, Marks Historic Political Shift". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-15.
- ↑ "The Gazette Extraordinary - No.2410/02 of Tuesday, November 12, 2024 - Proclamation by the President" (PDF). Presidential Secretariat. 12 November 2024. Archived (PDF) from the original on 12 November 2024. பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.
- ↑ "New parliament meeting : President issues proclamation". Newswire. 12 November 2024. Archived from the original on 12 November 2024. பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.
- ↑ 12.0 12.1 "Parliamentary Election Results – 2020". Election Commission of Sri Lanka. 7 June 2020. Archived from the original on 23 September 2024. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ Rasheed, Zaheena; Kuruwita, Rathindra (22 April 2022). "Thousands in Sri Lanka insist Rajapaksa family quit politics". Al Jazeera. Archived from the original on 12 September 2024. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ Fraser, Simon (9 May 2022). "Mahinda Rajapaksa: Sri Lankan PM resigns amid economic crisis". BBC. Archived from the original on 13 September 2024. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ Wong, Tessa; Murphy, Matt (13 July 2022). "Sri Lanka: President Gotabaya Rajapaksa flees the country on military jet". BBC. Archived from the original on 30 September 2024. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ Mao, Frances; Ethirajan, Anbarasan (20 July 2022). "Sri Lanka: Ranil Wickremesinghe elected president by MPs". BBC. Archived from the original on 27 August 2024. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
- ↑ 17.0 17.1 "Presidential Election Results – 2024". Election Commission of Sri Lanka. 22 September 2024. Archived from the original on 27 September 2024. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ "Presidential Election – 2024" (PDF). The Gazette Extraordinary. 22 September 2024. Archived (PDF) from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 22 September 2024.
- ↑ Perera, Ayeshea; Guinto, Joel (22 September 2024). "Left-leaning leader wins Sri Lanka election in political paradigm shift". BBC. Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 15 October 2024.
- ↑ Mallawarachi, Bharatha (25 September 2024). "Sri Lanka's new president calls a parliamentary election for November to consolidate his mandate". Associated Press. Archived from the original on 25 September 2024. பார்க்கப்பட்ட நாள் 25 September 2024.
- ↑ "The Electoral System". The Parliament of Sri Lanka. 14 December 2012. Archived from the original on 6 September 2024. பார்க்கப்பட்ட நாள் 6 September 2024.
- ↑ "The Constitution of the D. S. R. of Sri Lanka" (PDF). The Parliament of Sri Lanka. 30 March 2023. Archived (PDF) from the original on 18 September 2024. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
- ↑ 23.0 23.1 23.2 "Qualifications to register as an Elector". தேர்தல் திணைக்களம். Archived from the original on 2013-01-21. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.
- ↑ "Parliamentary Election – 2024 (Media release No.:PE/2024/01)" (PDF). Election Commission of Sri Lanka. 25 September 2024. Archived (PDF) from the original on 26 September 2024. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
- ↑ "2024 General Election: Number of MPs elected from each district revealed". Ada Derana. 25 September 2024. Archived from the original on 26 September 2024. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
- ↑ "Parliamentary Election – 2024 (Media release No.:PE/2024/01)" (PDF). Election Commission of Sri Lanka. 25 September 2024. Archived (PDF) from the original on 26 September 2024. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
- ↑ "2024 General Election: Number of MPs elected from each district revealed". Ada Derana. 25 September 2024. Archived from the original on 26 September 2024. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
- ↑ "Sri Lanka's new president calls a parliamentary election for November to consolidate his mandate". AP News (in ஆங்கிலம்). 24 September 2024. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ "Nomination period for General Election ends today - Breaking News | Daily Mirror". www.dailymirror.lk. பார்க்கப்பட்ட நாள் 13 October 2024.
- ↑ "How many candidates in Sri Lanka's 2024 Parliament Election". Newswire. 12 October 2024. Archived from the original on 12 November 2024. பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.
- ↑ "Sri Lanka's leftist president faces first parliament test". France 24. 12 November 2024. Archived from the original on 12 November 2024. பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.
- ↑ "Deadline to submit Postal Voting Applications extended". Newswire. 8 October 2024. பார்க்கப்பட்ட நாள் 11 October 2024.
- ↑ "Postal Voting Dates for 2024 General Election Announced". Newswire. 10 October 2024. பார்க்கப்பட்ட நாள் 11 October 2024.
- ↑ https://results.elections.gov.lk/
- ↑ 35.0 35.1 "All-island final results of 2024 General Election released". Ada Derana. 15 November 2024. Archived from the original on 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.