சிவஞானம் சிறீதரன்

இலங்கை தமிழ் அரசியல்வாதி

சிவஞானம் சிறீதரன் (பிறப்பு: திசம்பர் 8, 1968) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

சிவஞானம் சிறீதரன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
2010–2015
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சிவஞானம் சிறீதரன்

8 திசம்பர் 1968 (1968-12-08) (அகவை 55)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முன்னாள் கல்லூரியாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தொழில்ஆசிரியர்
இணையத்தளம்www.shritharan.com

ஆரம்ப வாழ்க்கை தொகு

யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவஞானம் பின்னர் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சிக்கு இடம் பெயர்ந்தார். ஆசிரியரான இவர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றினார்.[2] இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த இராணுவத் தளபதியாக இருந்த பிரிகேடியர் தீபன் என்ற வேலாயுதபிள்ளை பகீரதகுமாரின் சகோதரியைத் திருமணம் செய்தார்.

அரசியல் வாழ்க்கை தொகு

சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 10,057 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[3] 2015 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் (72,058) பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[4][5] 2020 தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.[6][7][8]

தேர்தல் வரலாறு தொகு

சிவஞானம் சிறீதரனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2010 நாடாளுமன்றம்[3] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10,057 தெரிவு
2015 நாடாளுமன்றம்[9] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 72,058 தெரிவு
2020 நாடாளுமன்றம்[10] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 35,884 தெரிவு

மேற்கோள்கள் தொகு

  1. "Directory of Members: Sivagnanam Shritharan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 17 September 2020.
  2. "SLA soldiers obstruct ITAK candidate from campaigning in Ki'linochchi". தமிழ்நெட். 12 March 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31349. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2010. 
  3. 3.0 3.1 preferences/Jaffna pref GE2010.pdf "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  5. "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  6. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  7. "General Election 2020: Preferential votes of Jaffna District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094033/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-jaffna-district. பார்த்த நாள்: 17 September 2020. 
  8. D. B. S. Jeyaraj (15 August 2020). "Did Sumanthiran Win In Jaffna By “Stealing” Sashikala’s Votes?". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/Did-Sumanthiran-Win-In-Jaffna-By-Stealing-Sashikalas-Votes/172-193895. பார்த்த நாள்: 17 September 2020. 
  9. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 20 September 2020. 
  10. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞானம்_சிறீதரன்&oldid=3434458" இலிருந்து மீள்விக்கப்பட்டது