நவ சமசமாஜக் கட்சி
நவ சமசமாஜக் கட்சி (Nava Sama Samaja Pakshaya NSSP, புதிய சமத்துவ சமூகக் கட்சி) என்பது இலங்கையின் ஓர் துரொக்சியிச இடதுசாரி அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிருப்தியாளர்களான விக்கிரமபாகு கருணாரத்தின, சுமனசிறி லியனகே போன்றவர்களினால் உருவாக்கப்பட்டது. சிரிதுங்க ஜெயசூரிய, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பின்னர் இணைந்து கொண்டனர். 1976 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சி அரசுக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது அப்திருப்தியாளர்கள் பலர் வெளியேறினர். 1977 டிசம்பரில் நவ சமசமாஜக் கட்சி என்ற பெயரை தமது கட்சிக்கு சூட்டினர்.
நவ சமசமாஜக் கட்சி | |
---|---|
Nava Sama Samaja Pakshaya | |
நிறுவனர் | விக்கிரமபாகு கருணாரத்தின |
செயலாளர் | விக்கிரமபாகு கருணாரத்தின |
தொடக்கம் | 1977 |
பிரிவு | லங்கா சமசமாஜக் கட்சி |
தலைமையகம் | 17 பராக்சு ஒழுங்கை, கொழும்பு 2 |
கொள்கை | பொதுவுடைமை, துரொக்சியிசம் |
தேசியக் கூட்டணி | இடது விடுதலை முன்னணி |
பன்னாட்டு சார்பு | நான்காம் அனைத்துலகம் |
தேர்தல் சின்னம் | |
மேசை | |
இணையதளம் | |
nssp.info | |
இலங்கை அரசியல் |
1982 அரசுத்தலைவர் தேர்தலில் நவ சமசமாசக் கட்சியின் வேட்பாளராக வாசுதேவ நாணயக்கார போட்டியிட்டு 17.005 வாக்குகள் (0.26%) மட்டும் பெற்று ஐந்தாவதாக வந்தார்.[1]
1983 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை கலவரத்தை அடுத்து நவசமாசக் கட்சி, மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளை இலங்கை அரசு தடை செய்தது.[2] 1985 ஆம் ஆண்டில் தடை நீக்கப்படும் வரை கட்சித் தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து வந்தனர்.[2]
1987 ஆம் ஆண்டில் நவசமாசக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி, இலங்கை மக்கள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற கூட்டணியை ஆரம்பித்தனர்.[3] Nanayakkara re-entered parliament after the 1989 நாடாளுமன்றத் தேர்தலில், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து இக்கூட்டணி சார்பாக வாசுதேவ நாணயக்கார தெரிவு செய்யப்பட்டார்.[4] 1994 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாணயக்கார நவ சமசமாசக் கட்சியில் இருந்து வெளியேறினார்.
1998 ஆம் ஆண்டில் நவ சமசமாசக் கட்சி வேறு சில இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து இடது விடுதலை முன்னணி (NLF) என்ற கூட்டணியை ஆரம்பித்தது.[5] இக்கூட்டணியின் சார்பில் விக்கிரமபாகு கருணாரத்தின 2010 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 7,055 வாக்குகளை ( 0.07%) மட்டும் பெற்றுத் தோல்வி அடைந்தார்.[6]
பன்னாட்டுத் தொடர்பு தொகு
தொடக்கத்தில் நவ சமாசக் கட்சி பன்னாட்டுத் தொழிலாளர் குழுவின் ஒரு பிரதிநிதியாக இருந்து வந்தது. பின்னர் 1988 ஆம் ஆண்டில் இக்குழுவில் இருந்து விலகியது. குழுவில் இருந்த வேறு சிலர் ஐக்கிய சோசலிசக் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தனர். 1991 ஆம் ஆண்டு முதல் விக்கிரமபாகு கருணாரத்தின தலைமையிலான நவசமசமாசக் கட்சியே நான்காம் அனைத்துலகம் அமைப்பில் இலங்கைப் பிரதிநிதியாக இருந்து வருகிறது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Result of Presidential Election 1982" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். 2013-03-28 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 Kannangara, Ananda (6 ஏப்ரல் 2002). "Dr. Wickramabahu Karunaratne gives evidence at Truth Commission". டெய்லி நியூஸ். Archived from the original on 2011-06-04. https://web.archive.org/web/20110604100204/http://www.dailynews.lk/2002/04/06/pol02.html. பார்த்த நாள்: 6 டிசம்பர் 2009.
- ↑ COLLURE, Raja (3 சூலை 2008). "65 years of fighting for the people". டெய்லிநியூஸ். Archived from the original on 2009-03-02. https://web.archive.org/web/20090302070225/http://www.dailynews.lk/2008/07/03/fea03.asp. பார்த்த நாள்: 6 டிசம்பர் 2009.
- ↑ "Result of Parliamentary General Election 1989" (PDF). Department of Elections, Sri Lanka. 2009-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sri Lanka". Leftist Parties of the World. 22 சூன் 2004. 2011-10-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 டிசம்பர் 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Presidential Election 2010". இலங்கை தேர்தல் திணைக்களம். 2012-08-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-11 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள் தொகு
- அதிகாரபூர்வ தளம் பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம்