கந்தன் மாறன் (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம்
(கந்தமாறன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


கந்தமாறன் என்பவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் சம்புவரையர் குல சிற்றரச கதாப்பாத்திரம் ஆவான். இவன் பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகனான வந்தியத்தேவன் என்பவனின் நண்பனாய் இருந்து பின் சந்தேகத்தால் இருவரும் பிரிந்தது போல் புதினப்படுத்தப் பட்டிருக்கிறது. இவனின் தங்கை மணிகேகலை.

கந்த மாறன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
பிற பெயர்கந்தமாற வேள்
குடும்பம்செங்கண்ணர் சம்புவரையர், மணிகேகலை
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு
தோழர்கள் ஆதித்த கரிகாலனின், வந்திய தேவன், பார்த்திபேந்திரன்

சங்ககால எதிரிகள்

தொகு

இப்புதினத்தின் படி இவன் வழிமுறையான சம்புவரையர் குலம் வல்வில் ஓரி என்ற சங்ககால குறுநில மன்னனின் வம்சத்தின் வழி வந்தவனாக சித்தரிக்கப்பட்டது. இந்த ஓரி மன்னன் காரி என்னும் மன்னனால் கொல்லப்பட்டான். இப்புதினத்தில் வரும் மலையமான் என்னும் கதாப்பாத்திரம் இக்காரி மன்னனின் வம்சத்தில் வந்தவன். இதனால் சம்புவரைய மன்னர்களுக்கும் இக்காரி குடும்பத்திற்கும் உட்புகைச்சல் இருந்தது போல் அமைக்கப்பட்டிருந்தது.