ஆதித்த கரிகாலன் (கதைமாந்தர்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஆதித்த கரிகாலன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழர் குல பட்டத்து இளவரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற ஆதித்த கரிகாலனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
ஆதித்த கரிகாலன் | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
உருவாக்கியவர் | கல்கி |
வரைந்தவர்(கள்) | மணியம், வினு, மணியம் செல்வன் |
தகவல் | |
பிற பெயர் | பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் |
தொழில் | சோழர்குல பட்டத்து இளவரசர் |
குடும்பம் | சுந்தர சோழர் அருள்மொழிவர்மன், இளைய பிராட்டி குந்தவை, |
குறிப்பிடத்தக்க பிறர் | பார்த்திபேந்திரன், வாந்தியதேவன், கந்தன் மாறன் |
மதம் | சைவம் |
தேசிய இனம் | சோழ நாடு |
தோழர்கள் | பார்த்திபேந்திரன், வந்தியதேவன், கந்தன் மாறன் |
கதாப்பாத்திரத்தின் இயல்பு
தொகுசுந்தர சோழரின் மகனாகவும், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவை தேவியின் மூத்த சகோதரராகவும், பட்டத்து இளவரசராகவும் ஆதித்த கரிகாலன் வருகிறார். சிறுவயதிலேயே போர்புரியும் குணம் கொண்டவராகவும், எதிரிகளைத் தன்னந்தனியே எதிர்த்து நிற்கின்ற வீரராகவும், முன்கோபம் கொண்டவராகவும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன்
தொகுகுந்தவைக்கு ஓலை
தொகுஆதித்த கரிகாலனுக்கு வாணர் குல வீரன் வந்தியத்தேவனும், பார்த்திபேந்திர_பல்லவனும் நண்பர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் வந்தியத்தேவனிடம் தன்னுடைய தங்கை குந்தவைக்கு ஒரு ஓலை கொடுத்தனுப்புகிறான் ஆதித்த கரிகாலன். காஞ்சியில் பொன்மாளிகை ஒன்றினைக் கட்டியிருப்பதாகவும் தஞ்சையில் இருக்கும் தன் தந்தை சுந்தர சோழரை அப்பொன்மாளிகைக்கு வந்து தங்கும்படியும் எழுதி அனுப்பியிருக்கிறான்.
நந்தினியுடன் காதல்
தொகுஆதித்த கரிகாலன் சிறுபிராயத்திலிருந்தே நந்தினியின்மேல் காதல் கொள்கிறான். போரில் தோற்று ஓடி ஒளிந்து கொண்ட வீரபாண்டியனைத் தேடிச் சென்ற ஆதித்த கரிகாலன் அவனை ஒரு வீட்டில் நந்தினியோடு காண்கிறான். நந்தினி வீரபாண்டியனைத் தன் காதலன் என்றும் அவனுக்கு உயிர்ப்பிச்சையளிக்குமாறும் ஆதித்த கரிகாலனிடம் மன்றாடுகிறாள். ஆனால், போர்வெறியிலும் தான் காதலித்தவள் இன்னொருவனின் காதலியாக மாறி அவனுக்காக மன்றாடுகிறாளே என்ற ஆத்திரத்திலும இருந்த ஆதித்த கரிகாலன் அதற்குச் செவிசாய்க்கமால் நந்தினியின் கண்முன்னே வீரபாண்டியனின் தலையை வெட்டிவிடுகிறான். ஆனால் அதற்காக பின்னர் மிகவும் வருந்துகிறான். கைகூப்பித் தன்னிடம் கெஞ்சியழுத நந்தினியின் உருவம் அவனைக் கனவிலும் நனவிலும் விரட்டித் துன்புறுத்துகிறது. அதனால் நந்தினி பழுவூர் இளையராணியாகத் தஞ்சையிலிருப்பதை அறிந்து தன் தந்தையைக் காணச் செல்வதற்கு கூட முடியாதவனாக தவிக்கிறான். தஞ்சை செல்வதையும் தவிா்க்கிறான்.
அருள்மொழிவர்மனுக்கு செய்தி
தொகுஆதித்த கரிகாலனுக்கு சோழ மன்னனாக முடிசூட்டிக் கொள்வதில் ஆர்வமில்லை. அதனால் தன் தம்பி அருள்மொழிவர்மனை ஈழத்திலிருந்து அழைத்து வந்து சோழ மன்னனாக அமரச் செய்துவிட்டு, தான் பெரும்படை திரட்டி நாடுகள் பலவும் கைப்பற்றி உலகெங்கும் புலிக் கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும் என்று ஆசை கொள்கிறான். அதற்காக பார்த்திபேந்திர பல்லவனை ஈழத்திற்கு சென்று அருள்மொழிவர்மனைக் காஞ்சிக்கு அழைத்துவர சொல்கிறான். ஆனால் அருள்மொழி வந்த கப்பல் சுழிகாற்றில் சிக்கிவிடுகிறது.
கடம்பூர் மாளிகை
தொகுஆதித்த கரிகாலன் ஒன்றை செய்வதென முடிவெடுத்துவிட்டால் யார் சொல்லையும் கேட்க மாட்டான் என்று அறிந்து வைத்திருக்கும் நந்தினி ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு வரும்படி பார்த்திபேந்திரன் மூலமாக செய்தி அனுப்புகிறாள். முதல் மந்திரி அநிருத்தர் இந்த கடம்பூர் சந்திப்பினை தடுத்து நிறுத்த எண்ணுகிறார். ஆனால் அது இயலாத காரியம் என்றுணர்ந்தவர், வந்தியத்தேவனை ஆதித்த கரிகாலனுக்கு துணையாக இருக்கும்படி அனுப்பி வைக்கிறார். இவ்வளவு விசயங்களை மீறி ஆதித்த காிகாலன் என்னவானான் என்பது மீதிக்கதை.