குந்தவை (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம்

குந்தவை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ இளவரசி ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற குந்தவை நாச்சியாரை சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

குந்தவை
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
குந்தவை (ஓவியம்:மணியம்)
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தோழிகள் வானதி, பூங்குழலி
தகவல்
பிற பெயர்குந்தவை நாச்சியார், பழையாறை இளவரசி, சின்ன பிராட்டி, இளைய பிராட்டி
குடும்பம்சுந்தர சோழர் ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், வந்தியத் தேவன் (கணவன்)
குறிப்பிடத்தக்க பிறர்வானதி, பூங்குழலி
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு

கதாப்பாத்திரத்தின் இயல்பு

தொகு

சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும் அருள்மொழிவர்மனின் தமக்கையாகவும் வருகிறாள். செம்பியன் மாதேவி கோவில்களுக்குத் திருப்பணி செய்வதைப் போல, மருத்துவ சாலைகள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்குமான உதவிகளைக் குந்தவை செய்கிறாள். இதற்கு சுந்தர சோழர் நோயுற்று இருந்தமையினால் குந்தவை மனதில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று பொன்னியின் செல்வனில் கல்கி கூறுகிறார். சுயமாக வாழவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்பும் பெண் என்பதால் பழையாறையில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள். வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பதையும், நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதையும் பார்க்கையில் குந்தவையை நவீன பெண்ணியத்தின் குறியீடாக கல்கி செதுக்கியிருப்பது தெரிகிறது. பராந்தக சுந்தரசோழா் செம்பியன் மாதேவி அநிருத்தா் அருள்மொழி உள்ளிட்ட அரசகுலத்தோா் மட்டுமல்லாமல் சோழ நாட்டு மக்கள் அனைவாின் அன்பையும் பெற்றவள்.

வந்தியத்தேவனுடன் காதல்

தொகு

குந்தவையும் அவள் தோழி வானதியும் குடந்தை சோதிடரிடம் வருகிறார்கள். அப்போது அங்கு வரும் வந்தியத்தேவனைச் சந்திக்கிறாள் குந்தவை. வானதியின் பயத்தினைப் போக்க ஆற்றங்கரையில் இறந்துபோன முதலையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கையில் அதை உண்மை முதலையென நினைத்து வந்தியத்தேவன் வேல் எறிகிறான். குந்தவையின் தோழிகள் இதனைக் கண்டு சிரித்துவிட வந்தியத்தேவன் கோபம் கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறான். இரண்டு முறை வந்தியத்தேவனைச் சந்தித்தும் அவனிடம் குந்தவையால் பேசமுடியவில்லை. அதன் பிறகு வந்தியத்தேவனே குந்தவையைத் தேடி வந்து குந்தவையின் சகோதரன் ஆதித்த காிகாலன் கொடுத்தனுப்பிய ஓலையை தருகிறான். இருவருக்குள்ளும் காதல் மலா்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனா். ஈழத்தில் அருள்மொழிவர்மனுக்குத் தஞ்சை நிலவரம் குறித்து எழுதி, உடனே இளவரசரை அழைத்துவரும்படிக் கூறி வந்தியத்தேவனிடம் பொறுப்பினை ஒப்படைக்கின்றாள்.

வந்தியத்தேவன் இளவரசரை சந்தித்து குந்தவையை கோடிக்கரை வரை அழைத்துவருகிறான். அருள்மொழிவர்மனின் உடல்நிலையை குணம் செய்ய நாகப்பட்டினதில் இருக்கும் புத்த விகாரத்திற்கு பூங்குழலி சேந்தன் அமுதன் துணையுடன் அனுப்புகிறான். இச்செய்தியை பழையாறையில் வசிக்கும் குந்தவையிடம் சேர்ப்பிக்கிறான். குந்தவையும், அநிருத்த பிரம்மராயரும் இணைந்து வந்தியத்தேவனை காஞ்சியில் இருக்கும் ஆதித்த கரிகாலனுக்கு துணையாக இருக்கும் படி அனுப்பி வைக்க முடிவு செய்கிறார்கள். அநிருத்தரால் சிறைபட்ட வந்தியத் தேவனை விடுவித்து காஞ்சிக்கு செல்லும்படியும், தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு எக்காரணம் கொண்டும் சென்றுவிடாமல் காக்கவும் அறிவுருத்துகிறாள். அப்போது வந்தியத் தேவன் மேல் இருக்கும் தன்னுடைய காதலையும் தெரிவிக்கின்றாள். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் காஞ்சிக்கு செல்கின்றார்கள்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தவை_(கதைமாந்தர்)&oldid=3600802" இலிருந்து மீள்விக்கப்பட்டது