கந்துலா (யானை)
கந்துலா (Kandula) என்பது சிங்கள வரலாற்று நூலான மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பிரபலமான போர் யானையாகும் .
இலங்கையின் துட்டுகைமுனு (கி.மி.101– 77) பிறந்தபோது, மதிப்புமிக்க பல பொருட்கள் தன்னிச்சையாக தோன்றியதாகக் கூறப்படுகிறது. அவை பல்வேறு நபர்களால் கண்டுபிடிக்கப்பட்டு புதிதாகப் பிறந்தவருக்கு பரிசாக கொண்டு வரப்பட்டன. அவற்றில் கந்துலா என்ற மீனவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு யானைக்கு அதன் கண்டுபிடிப்பாளரின் பெயரிடப்பட்டது. மேலும், துட்டுகைமுனுவின் தோழரும் ஆனது. இலங்கையை ஒன்றிணைக்க வழிவகுத்த போர்களின் போது அவனுடன் பணியாற்றியது.
எல்லாளனுடனான போர்
தொகுஎல்லாளன் எனும் தமிழ் மன்னன் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு சுமார் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுடன் போர்தொடுத்த துட்டகமுனுவின் படைகள் எல்லாளன் படையிடம் தோற்று பின்வாங்க ஆரம்பித்தன , போரில் தோல்வியை தவிர்ப்பதற்காக துட்டகைமுனு சாதுரியமாக, எல்லாளனை ஒற்றைச்சமருக்கு அழைக்க, யுத்த தர்மத்தின் படி எல்லாளனும் அதை ஏற்று போர் புரிந்தான், நீண்ட நேர சமருக்கு பிறகு, வயோதிகனான எல்லாளனை, துட்டகைமுனு வெற்றிபெற்றான், இறந்த எல்லாளனின் வீரத்தை மெச்சி, அவனுக்கு சிலை எழுப்பி, மரியாதை செய்தான்
அமெரிக்காவில் கந்துலா
தொகுவாசிங்டன், டி. சி.யில் உள்ள தேசிய மிருகக்காட்சிசாலையில் 2001 இல் பிறந்த ஒரு ஆசிய யானைக்கு கந்துலாவின் பெயரிடப்பட்டது. ஜெர்மன் கால்நடை மருத்துவர்கள் குழு உருவாக்கிய ஒரு முறையைப் பயன்படுத்தி செயற்கை கருவூட்டல் மற்றும் 5 வது ஏஐ பிறப்பு ஆகியவற்றால் கருத்தரிக்கப்பட்ட முதல் ஆசிய யானையாகும்.
இலங்கை காலாட்படை
தொகுஇலங்கை காலாட்படைப் படைப்பிரிவுக்கு துட்டுகைமுனுவின் அரச யானையின் பெயரால் கந்துலா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kandula – the little elephant of the Army". sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21.