கந்தையா குமாரசாமி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கந்தையா குமாரசாமி என்ற இயற்பெயர் கொண்ட நல்லைக்குமரன் குறிப்பிடத்தக்க கவிஞர் ஆவார். இவர் அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் EDITOR´S CHOICE AWARD பெற்றவர்.
இலங்கை நிலவரவுத் திணைக்களத்தில் பட வரைஞராகப் (1956-1982) பணியாற்றியவர். தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள் எழுதுபவர்.அவுஸ்திரேலியத் தமிழர்களின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இலங்கையின் பிரபல பத்திரிகைகள் உட்பட மல்லிகையிலும் இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. அவுஸ்திரேலியாவிலும் உதயம், கலப்பை, கனடா உலகத் தமிழோசை போன்ற பத்திரிகைகளுக்கும், இதழ்களுக்கும எழுதிக் கொண்டிருக்கிறார்.