கலப்பை (சஞ்சிகை)

கலப்பை (About this soundஒலிப்பு ) , அவுத்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பினரால் ஜூலை 1994 இலிருந்து வெளியிடப்படும் காலாண்டு கலை இலக்கிய இதழாகும்.

கலப்பை
வகைகலை, இலக்கியம்
இடைவெளிகாலாண்டிதழ்
முதல் வெளியீடுஜூலை 1994
கடைசி வெளியீடு
— Number
20??
????
நிறுவனம்அவுஸ்திரேலியத் தமிழ்
பட்டதாரிகள் சங்கம்
நாடுசிட்னி, அவுஸ்திரேலியா
வலைத்தளம்[]

”மனித மனங்களை உழுது, உலகத் தமிழர் தம் உணர்வை உயர்த்தி நிற்க வேண்டும்”, ”முக்கால நிகழ்வுகளையும் உள்ளடக்கிச் சமுதாய சீர்திருத்தத்திற்காகப் பாடுபட வேண்டும்” என்பது கலப்பையின் முக்கிய கோட்பாடாகும். இன்றைய தமிழ் இளைஞரின் தேவைகளைப் நிறைவு செய்யக்கூடிய ஆக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் கலப்பையின் குறிக்கோளாகும்.

நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி வெளிவரும் கலப்பையின் வெளியீட்டுப் பணியை இப்போது "அவுஸ்திரேலியத் தமிழ்ப் பட்டதாரிகள் சங்கம்" என்ற அமைப்பு பொறுப்பேற்று நடத்துகின்றது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்பை_(சஞ்சிகை)&oldid=2553957" இருந்து மீள்விக்கப்பட்டது