கனக ஹா மா (Kanaka Ha Ma) ஓர் குறிப்பிடத்தக்க கன்னடக் கவிஞரும், கட்டுரையாளரும் ஆவார். இவர் ஒரு நாடக நடிகராகவும், கன்னட வெளியீடுகளுக்கான சுதந்திரமான பத்திரிகையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.[1]

குடும்பம்

தொகு

கனகா, கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் ஹாலிகெரேவைச் சேர்ந்தவர்.[2] இவர் அரசியல்வாதியான பி. சி. விஷ்ணுநாத்தை மணந்தார். தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது.

பணிகள்

தொகு

நினாசம் என்ற கலாச்சார அமைப்பை நடத்தும் அக்சரா பிரகாசன் என்பவரால் இவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்ர், உருது கவிஞர், ஜாவேத் அக்தரின் தர்காஷ் என்ற புத்தகத்தை கன்னடத்திற்கு மொழிபெயர்த்தார் [3] இவரது கவிதைகள், ராட்டர்டேமில் நடைபெற்ற சர்வதேச கவிதைகள் நிகழ்ச்சியில் இடம்பெற்று ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர், கன்னட வெளியீடுகளான லங்காஷ் செய்தித்தாள் , கன்னட தினசரியான உதயவாணி உள்ளிட்ட கன்னடப் பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். ஸ்பாரோ (SPARROW )பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்கான ஒலி மற்றும் பட ஆவணங்களில் பணிபுரியும் போது உருது, மராத்தி, கன்னட எழுத்தாளர்களின் கவிதைகளையும், நேர்காணல்களையும் மொழிபெயர்த்தார்.[4] மேலும், அவர்கள் பற்றிய புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.[5] இவர் கடந்த 3 ஆண்டுகளாக செங்கனூரில் [6] தென்னிந்திய எழுத்தாளர் குழு ஏற்பாடு செய்த பம்பா (People for Performing Arts and More) என்பதின் நிறுவனர் உறுப்பினராகவும் , இயக்குனராகவும் இருக்கிறார்.[7] நவம்பர் 1997இல் பிரான்சின் ஐவ்ரி சுர் சீனில் நடந்த சர்வதேச கவிதை போட்டியில் கனிமொழி, பெய் தாவோ போன்ற பிற புகழ்பெற்ற கவிஞர்களுடன் கலந்து கொண்டார்.[8]

வெளியீடுகள்

தொகு

இவருடைய சில படைப்புகள்

  • ஹோலபாகிலு (ஆற்றின் வாயில்), 1993) [9]
  • பாபநாசினி (பாவங்களை அழிப்பவர்), 1997) [9]
  • அரபி எம்ப கடலு (அரேபிய கடல்), 2006) [10]
  • பட்டாலிகே (தர்காஷ், 2003) [11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kanaka Ha. Ma". Poetry International Rotterdam. Poetry International. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  2. "Nature poetry: a second renaissance?". Sunday Herald Articulations. Deccan Herald. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  3. D'souza, Priya. "Poems are a garland of small freedoms". Poetry International Rotterdam. Poetry International Rotterdam. Archived from the original on 17 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Publication Translations". Sparrow Online. Sound and Picture Archives for Research on Women. Archived from the original on 15 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  5. Ha. Ma., Kanaka. "Participants". Bangalore Literature Festival 2015. Bangalore Literature Festival. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  6. "South India Writers' Ensemble at Chengannur on 24th July". DC Books. DC Books. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "SIWE Invitation" (PDF). Anjali Writes. Wordpress. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  8. "Looking at It This Way". Open The Magazine. Open Media network. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  9. 9.0 9.1 "Kanaka Ha. Ma". Akshara Prakashana. Akshara Prakashana. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  10. "Arabi emba kadalu". Akshara Prakashana. Akshara Prakashana. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  11. "Catalog" (PDF). Indira Gandh National Center for the Arts SRC.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகா_ஹா_மா&oldid=3928517" இலிருந்து மீள்விக்கப்பட்டது