கனடாவில் பால்வினைத் தொழில்

கனடாவில் பெண்கள் பால்வினைத் தொழிலுக்கு பல நாடுகளிலுமிருந்து வரவழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.பலர் கடத்தப்பட்டும்,பலர் தங்களின் விருப்பத்தின்படியும் பாலியல் தொழிலுக்குள் உள்நுழைகின்றனர்.கனடாவில் பாலியல்தொழில்கள் பல வடிவமைப்பினைப் பெற்றுள்ளது அவை:

  • பாலியல் திரைப்படங்கள்
  • நிர்வாண நடன மன்றங்கள்
  • குழுமப் பாலியல் மன்றங்கள்[1][2][3]

இவ்வாறான பலவகையிலும் பாலியல் தொழில் சட்டத்தின்படி குற்றமில்லையென மாற்றம்பெற்றுள்ளது. ஆனாலும் ஒரு விலைமாது விற்கப்படும் உடலை வேறொருவர் அவ்வுடலைப்பெற சட்டம் அனுமதிக்காதிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் விபச்சாரம் மற்றும் அதனைச் சார்ந்த சட்ட அமைப்புகள் பெரும்பாலான மக்களாலும் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பதனைக் குறிப்பிட்டுக் கூறலாம்.கனடாவில் அமையப்பெற்றுள்ள சட்ட அமைப்புகளின்படி விலைமாதுக்கள் தங்கள் உடல்களை விற்பதற்குத் தடையேதும் இல்லாதிருக்கின்றது. அதேவேளை விலை மாதுக்களின் உடல்களை வாங்குவதற்கு தடை உள்ளது. இத்தகு சட்டம் நடைமுறையில் உள்ளபொழுதும் பலர் விபச்சாரத் தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஆனாலும் இத்தகு விபச்சாரத் தொழில்களில் ஈடுபடும் விலை மாதுக்கள் எத்தகு வகையில் தமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பணச் செலவுகளை எதிர்கொள்கின்றார்கள் என்பது இன்றளவும் கவனிப்பாரற்று இருப்பதும் உண்மை.அதாவது ஒரு விலைமாதுவின் உடலை வாங்க இயலாத சட்டம் இல்லாதபொழுது எந்தவகையிலான பணவலிமையினை நாடி அவர்கள் விபச்சாரத் தொழில்களில் ஈடுபடுகின்றனர் என்பதும் ஒரு கேள்விக்குறியாகவுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Government of Canada, Department of Justice (March 11, 2015). "Questions and Answers - Prostitution Criminal Law Reform: Bill C-36, the Protection of Communities and Exploited Persons Act". www.justice.gc.ca.
  2. Division, Government of Canada, Department of Justice, Research and Statistics (December 2014). "Technical Paper: Bill C-36, Protection of Communities and Exploited Persons Act". www.justice.gc.ca.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. "Canada Supreme Court strikes down prostitution laws". BBC News. December 20, 2013. https://www.bbc.co.uk/news/world-us-canada-25468587.