கனடா டிரஸ்ட்
(கனடா டிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கனடா டிரஸ்ட்(CanadaTrust) ஒரு நிதி சேமிப்பு குழுமம் ஆகும். இது கனடா லண்டன் ஒன்ராரியோவில் ஹோரன் மற்றும் எரிக் (Huron & Erie) என்பர்களால் 1864ல் கடன் மற்றும் சேமிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இவர்கள் டோரோன்டொவில் டொரோன்டோ ஜெனரல் டிரஸ்ட் என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடாத்திவந்தனர். 1872ல் இவ்விரு நிறுவனங்களையும் இணைத்து கனடா டிரஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 2000ம் ஆவது ஆண்டுவரை இந்நிறுவனம் கனடாவின் ஆறாவது பெரிய நிதி நிறுவனமாக செயல்பட்டுவந்தது. 2000ம் ஆண்டு டொரோன்டோ டொமினியன் வங்கிக் குழுமமும், கனடா டிரஸ்ட்டும் ஒன்றாக இணைக்கப்பட்டன. தற்பொழுது டொரோன்டோ டொமினியன் (TD வங்கி) வங்கிக் குழுமம் TD கனடா டிரஸ்ட் என்ற பெயரிலேயே கனடா முழுவதும் தனது சேவையை நடத்திவருகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to TD Bank Financial Group". TD Bank Financial Group. பார்க்கப்பட்ட நாள் 15 March 2013.
- ↑ TD Bank Group(3 December 2020). "TD Bank Group Reports Fourth Quarter and Fiscal 2020 Results"(in en). செய்திக் குறிப்பு.
- ↑ Yusufali, Sasha (2012). "TD Bank Financial Group". The Canadian Encyclopedia.