டொரன்டோ டொமினியன் வங்கி

டொரன்டோ டொமினியன் (The Toronto-Dominion) வங்கி சந்தை முதலீடு மற்றும் பணக்கையிருப்பு அடிப்படையில் கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாகவும், வட அமெரிக்காவில் ஆறாவது பெரிய வங்கியாகவும் உள்ளது. இது 1955ம் வருடம் டொரன்டோ வங்கி மற்றும் டொமினியன் வங்கி இணைப்பு முலம் உருவாக்கப்பட்டது. டொரன்டோ டொமினியன் வங்கி நிதியியல் குழுமம் சுமார் 74000 ஆயிரம் பணியாளர்களுடன், உலகம் முழுவதும் சுமார் 1700000௦ வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகின்றது. இது கனடாவில் TD கனடா டிரஸ் (TD Canada Trust ) என்ற பெயரில் 1100கும் மேற்பட்ட கிளைகளுடன் நாடுமுழுவதும் சேவை செய்துவருகின்றது. அமெரிக்கவில் சில வங்கிகளை கையகப்படுத்தியதன் முலம் அங்கும் தனது சேவையை விரிவுபடித்தியுள்ளது. அங்கு 1000 கிளைகளுடன் 6500000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இவ்வங்கி தனது சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இவ்வங்கி கனடாவில் முதல் 100 சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றதுடன் போர்ப்ஸ் பத்திரிக்கை 2010ல் நடாத்திய உலகலாவிய சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 86வது இடத்தையும் பிடித்துள்ளது.

டொரன்டோ டொமினியன் வங்கி
வகைபொது நிறுவனம்
நிறுவுகைடொரன்டோ, ஒன்டாரியோ, 1955
டொரொன்டோ வங்கி, 1855
டொமினிக்கன் வங்கி, 1869
தலைமையகம்டொரன்டோ, ஒன்டாரியோ, கனடா
முக்கிய நபர்கள்டபிள்யு. எட்மண்ட் கிளார்க்,
முதன்மை செயல் அதிகாரி
தொழில்துறைநிதிச் சேவைகள்
வருமானம்Green Arrow Up Darker.svg $19.565 பில்லியன் கனடிய டாலர் (2010)
நிகர வருமானம் $4.644 பில்லியன் கனடிய டாலர் (2010)
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg $619.545 பில்லியன் கனடிய டாலர் (2010)
பணியாளர்65,930 முழுநேரப்பணியார்கள் (2009)
இணையத்தளம்www.td.com
TD Centre View from Yonge and King.JPG

செயல்பாடுகள்தொகு

டொரன்டோ டொமினியன் கிழ்கண்ட கிளை நிறுவனங்களுடன் கனடா மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டுவருகின்றது.