கனநீர் ஆலை, கோட்டா
கோட்டாவில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று. கனநீர் வாரியம் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவில் இந்தியாவின் மூன்றாவது கனநீர் ஆலையை அமைத்தது.[1] இவ்வாலையில் 1985 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாள் அன்று வணிக முறையில் உற்பத்தி துவங்கியது. இந்த அலையை நிறுவ ஆன முதலீடு ரூபாய் 7730 இலட்சம் ஆகும்.
கோட்டாவில் அமைந்துள்ள கனநீர் ஆலை முழுக்க முழுக்க இந்திய அறிவியல் வல்லுனர்களின் தொழில் நுட்பத்தின் அடிப்படையில், H2S-H20, அதாவது நீர்-ஐதரசன் சல்பைட்டு பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட, இரு முறை வெப்ப பதனீட்டு முறையில் செயல்படுவதாகும். ராஜஸ்தான் அணுமின் நிலையத்திற்கு அருகாமையில் செயல்படும் இவ்வாலையில் இருந்து தயாரித்த கனநீர் இந்த அணுமின் நிலையத்தில் பயன்படுகிறது. ராணா பிரதாப் ஏரியில் இருந்து தூய்மைப்படுத்திய நீரும் இங்கு கலந்து D20 வுடன் பயன்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ^ http://heavywaterboard.org/htmldocs/general/about.asp பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ^ http://www.dae.gov.in/heavywaterboard.org/docs/hwpkota1.htm பரணிடப்பட்டது 2012-02-24 at the வந்தவழி இயந்திரம்