கனம் ராஜேந்திரன்

கனம் இராசேந்திரன் (Kanam Rajendran) (நவம்பர் 10, 1950) இந்திய பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர் ஆவார். இவர் 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார் [1]. இவர் கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டம் வழூர் சட்டமன்ற தொகுதியில் 1982 முதல் 1992 வரை கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து இருமுறை பிரதிநிதித்துவப்படுத்தினார். மார்ச் 2015 இல் இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் கேரளா மாநிலக் குழுவின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கனம் ராஜேந்திரன்
KANAM RAJENDRAN DSC 0121.A.JPG
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கேரள மாநிலக் குழு
முன்னவர் பன்னியன் ரவீந்திரன்
வழூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 நவம்பர் 1950 (1950-11-10) (அகவை 70)
கணம், கோட்டயம் மாவட்டம், கேரளா, இந்தியா.
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வனஜா ராஜேந்திரன்
பிள்ளைகள் 1 மகன்1மகள்

வகித்த பதவிகள்தொகு

  • செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) 
  • கேரள மாநிலக் குழு செயலாளர், அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF) 
  • கேரள மாநிலக் குழு செயலாளர், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) 
  • கேரள மாநிலக் குழு துணைத்தலைவர், AIYF தேசிய கவுன்சில்
  •  உறுப்பினர், சிபிஐ மாநில செயலகம் 
  • உறுப்பினர், 7 வது கேரள சட்டமன்றம் (1982-87) 
  • உறுப்பினர், 8 வது கேரளா சட்டமன்றம் (1987-92) 
  • தலைவர், அரசாங்க உத்தரவாதங்களின் குழு (1984-87)

மேர்கோள்கள்தொகு

  1. "Kanam Rajendran". Kerala Legislative Assembly. Retrieved 3 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனம்_ராஜேந்திரன்&oldid=3030516" இருந்து மீள்விக்கப்பட்டது