கனா மக்மால்பஃப்
கனா மக்மால்பஃப் (Hana Makhmalbaf) ஈரானைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர். இவர் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு பிறந்தார்.
குடும்பம்
தொகுஇவர் ஈரானின் திரைப்பட இயக்குனர் மோசன் மக்மால்பஃபின் மகளும் ஈரானிய இயக்குனர் சமீரா மக்மால்பஃபின்ன் தங்கையும் ஆவார்.
திரைப்பட வாழ்க்கை
தொகுஇவரின் முதல் குறும்படமான ஜாய் ஆப் மேட்னஸ் (Joy of Madness) 2003 ஆம் ஆண்டில் வெளியானது. இத்திரைப்படமானது இவரது சகோதரி சமீரா மக்மால்பஃப் இயக்கிய அட் பைவ் இன் தி ஆப்டர்நூன் திரைப்பட உருவாக்கம் பற்றியது. இவரது இளவயது காரணமாக இத்தாலியின் விதிகளின்படி இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கு இயலவில்லை.
படைப்புகள்
தொகு- ஜாய் ஆப் மேட்னஸ் (Joy of Madness)
- புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆப் ஷேம் (Buddha Collapsed out of Shame)
விருதுகள்
தொகுஇவரது முதல் திரைப்படமான புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆப் ஷேம் (Buddha Collapsed out of Shame) 2007 ஆம் ஆண்டு கனடாவில் விருது பெற்றது. மேலும் இத்திரைப்படத்திற்கு ஸ்பெயினில் நடந்த சான் செபாஸ்டியன் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் கிடைத்தது. இவரது இரண்டாவது திரைப்படமான க்ரீன் டேஸ் (Green Days) ரொறன்ரோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.