கன்சா ஜாவேத்

கன்சா ஜாவேத் (Kanza Javed) பாக்கித்தானைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆவார், ஆஷஸ், ஒயின் அன்ட் டஸ்ட் என்ற புதினக்களுக்கு மிகவும் பிரபலமானவர்.

கன்சா ஜாவேத்
இயற்பெயர்
کنزا جاويد
பிறப்புலாகூர்[1]
தொழில்எழுத்தாளர், புதின ஆசிரியர், கவிஞர்
மொழிஆங்கிலம்
தேசியம்பாக்கித்தானியர்
வகைபுனைகதை இலக்கியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆஷஸ், ஒயின் அன்ட் டஸ்ட்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

கன்சா ஜாவேத் பாக்கிஸ்தானின் லாகூரில் பிறந்தார். கின்னார்ட் மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் தனது முதுதத்துவமாணி பட்டத்தைப் பெற்றார். பின்னர் இவர் வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் தனது நுண்கலையில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் சக ஊழியராகவும், அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞராகவும் இருந்தார். இரண்டு பல்கலைகழகங்களிலும் பயில பாக்கித்தானிலுள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான அறக்கட்டளை நிதியுதவி வழங்கியது. [2]

தொழில் தொகு

ஜாவேத் ஆஷஸ், ஒயின் அன்ட் டஸ்ட் என்ற தனது முதல் நூலை 2015இல் வெளியிட்டார். [3][4] திபோர் ஜோன்ஸ் தெற்காசியா பரிசுக்காக இந்தப் புதினம் பட்டியலிடப்பட்டது. தனது 17 வயதில் புத்தகத்தை எழுதத் தொடங்கினார். கையெழுத்துப் பிரதி விருதுக்கு பட்டியலிடப்பட்டபோது 21 வயதாக இருந்தார். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட முதல் பாக்கித்தானியராகவும் 2020ஆம் ஆண்டு நிலவரப்படி பரிந்துரைக்கப்பட்ட இளைய நபராகவும் இருந்தார். [5] [6] [7] இவர் தனது புத்தகத்தை இந்தியாவின் குமாவுன் இலக்கிய விழாவில் வெளியிட எண்ணியிருந்தார். ஆனால் தற்காலிகமாக நுழைவு இசைவு மறுக்கப்பட்டார். அதற்கு பதிலாக திருவிழாக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இசுகைப் வழியாக அதை வெளியிட்டார்.

இவரது இட் வில் ஃபாலோ யூ ஹோம் என்ற சிறுகதை, அமெரிக்க லிட்டரரி ரிவியூ என்ற அமெரிக்க இதழில் (2020) வெளியிடப்பட்டது. [8] கேரி இட் ஆல் என்ற சிறுகதை தி பஞ்ச் இதழில் (2020) வெளியிடப்பட்டது. [9]இராணி ( 2020) என்ற சிறுகதை சர்வதேச இலக்கிய விருதுகளை ( சிறுகதைகளுக்கான ரெனால்ட்ஸ் பரிசு ) வென்றது. மேலும், சாலமண்டர் புனைகதைப் போட்டியில் 2020இல் இறுதிப் போட்டியாளராக இருந்தார். [10]

மேற்கோள்கள் தொகு

  1. "Author Kanza Javed on her debut novel, Ashes, Wine And Dust". Elle (India). 22 January 2016. https://elle.in/article/author-kanza-javed-on-her-debut-novel-ashes-wine-and-dust. பார்த்த நாள்: 29 May 2020. 
  2. "Pakistani women at ASU provide glimpse of culture 'Beyond the Hijab'". ASU Now: Access, Excellence, Impact (in ஆங்கிலம்). 2015-07-28. பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
  3. Javed, Kanza. "First fiction: a striking new novel from Pakistan". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
  4. "'Ashes, Wine and Dust' – is but our reality! | Pakistan Today". www.pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Ashes, Wine and Dust: Unswerving, profound and painfully beautiful" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-07-31. பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
  6. "A rare talent | Pakistan Today". www.pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-05-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Malhotra, Aanchal (2015-12-01). "Ashes, Wine and Dust: Kanza Javed's novel explores a love affair with Lahore". Images (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-27.
  8. americanliteraryreview (2020-04-03). "Kanza Javed". American Literary Review (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
  9. "Carry It All". The Punch Magazine.
  10. "Salamander Magazine | a magazine for poetry, fiction, & memoirs". salamandermag.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்சா_ஜாவேத்&oldid=3759205" இலிருந்து மீள்விக்கப்பட்டது