கன்சியாம் திவாரி

இந்திய அரசியல்வாதி

கன்சியாம் திவாரி (Ghanshyam Tiwari, பிறப்பு: டிசம்பர் 19, 1947) இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ராஜஸ்தான் மாநில அரசின் கல்வி அமைச்சராக பதவி வகித்தார். ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், கட்சியின் மத்திய பணிக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் ஜெய்ப்பூர் மாவட்டத்திலிருந்து வந்தவர். 13 வது ராஜஸ்தான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்தார். தற்போது சங்கானர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். சிகாரில் பிறந்த திவாரி, ஸ்ரீ கல்யாண் கல்லூரியில் வணிகவியலும்  ராஜஸ்தான் பல்கலைக்கழகத்திலிருந்து சட்டக் கல்வியில் பட்டமும் பெற்றார்.[1] 1980-இல் சிகார் தொகுதியில் முதல் முறையாக ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 1985-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 சட்டமன்றத் தேர்தலில் அவர் சோமு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2003 முதல் அவர் சங்கானர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தான் அரசில் இவர் தற்போது எப்பதவியிலும் இல்லை.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Members Page". www.rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 19-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்சியாம்_திவாரி&oldid=2381318" இலிருந்து மீள்விக்கப்பட்டது