கன்னடபங்காளம்
கன்னடபங்காளம் பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஇந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி1 ம1 க3 ம1 ப த1 ச் |
அவரோகணம்: | ச் த1 ப ம1 க3 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். ஆரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும்.