கன்ன குறுந்தசை

முக பாவனைகளை ஏற்படுத்தும் தசைகள்

கன்ன குறுந்தசை (zygomaticus minor muscle) என்பது முக பாவனைகளை ஏற்படுத்தும் தசைகளில் ஒன்றாகும். இது கன்ன எலும்பு பகுதியில் தொடங்கி கண் வட்ட தசை, பக்கவாட்டு முகத்தில் மேல் தூக்கி உதடு தசை வழியாக மேல் உதட்டின் வெளி புறத்தில் இணைகிறது. சிரிக்கும் போது மேல் உதட்டை மேல்புறம், பின்புறம் மற்றும் வெளி புறமாக இழுக்கிறது. அனைத்து முக பாவனை தசைகளைப் போல முக நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

கன்ன குறுந்தசை
தலை, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் உள்ள தசைகள். கன்ன குறுந்தசை சிவப்பு வண்ணத்தில்
LatinMusculus zygomaticus minor
Originகன்ன எலும்பு
Insertionமேல் உதடு பகுதியின் தோல்
Arteryமுக தமனி
Nerveமுக நரம்பு
Actionsமேல் உதட்டை உயர்த்துவது
TAA04.1.03.030
தசைக் குறித்த துறைச்சொற்கள்

சில நேரங்களில் கன்ன குறுந்தசை மேல் தூக்கி உதடு தசையின் கன்ன பகுதியின் தசைதலையாக கருதப்படுகிறது. [1]

படிமங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்ன_குறுந்தசை&oldid=2931887" இலிருந்து மீள்விக்கப்பட்டது