கபில் தேவ் அகர்வால்

கபில் தேவ் அகர்வால் (Kapil Dev Aggarwal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3] பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் முசாபர்நகர் நகர் பாலிகாவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசில் சுயாதீனப் பொறுப்புடன் கூடிய அமைச்சராகத் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வி இலாகாவினை நிர்வகித்தார்.

கபில் தேவ் அகர்வால்
அகர்வால் முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன்
சட்டமன்ற உறுப்பினர் 18வது சட்டமன்றம், உத்தரப்பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2022
முன்னையவர்இவரே
தொகுதிமுசாபர்நகர்
சட்டமன்ற உறுப்பினர் 17ஆவது சட்டமன்றம், உத்தரப்பிரதேசம்
பதவியில்
மார்ச் 2017 – மார்ச் 2022
முன்னையவர்இவரே
பின்னவர்இவரே
தொகுதிமுசாபர்நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சூன் 1966 (1966-06-06) (அகவை 57)
முசாபர்நகர், உத்தரப்பிரதேசம், இந்தியா[1]
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அஞ்சுபால அகர்வால் (மனைவி)
பிள்ளைகள்
  • சிவம் அகர்வால்
  • கனிகா அகர்வால்
  • தேவனேசு அகர்வால்
[1]
பெற்றோர்இரமேஷ்சந்த அகர்வால்[1]
வாழிடம்(s)முசாபர்நகர், உத்தரப்பிரதேசம், இந்தியா
முன்னாள் கல்லூரிமீரட் பல்கலைக்கழகம்[1]
தொழில்அரசியல்வாதி

அரசியல் தொகு

கபில் தேவ் அகர்வால் உத்தரப்பிரதேசத்தின் 16 மற்றும் 17வது சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2016 முதல், இவர் முசாபர்நகர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2016ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் 7352 வாக்குகள் வித்தியாசத்தில் கௌரவ் சுவரூப்பை தோற்கடித்தார். 2017 சட்டமன்றத் தேர்தலில் கௌரவ் சுவரூப்பை 10,704 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கௌரவ் சுவரூப்பை 18583 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4]

சட்டமன்ற உறுப்பினர் பதவி தொகு

# முதல் வரை பதவி கருத்துகள்
01 பிப்ரவரி 2016 மார்ச் 2017 உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர் [4]
02 மார்ச் 2017 மார்ச் 2022 உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர் [4]
03 மார்ச் 2022 பதவியில் உறுப்பினர், 18வது சட்டமன்ற உறுப்பினர் [5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Candidate affidavit". My neta.info. http://www.myneta.info/uttarpradesh2017/candidate.php?candidate_id=64. பார்த்த நாள்: 10 November 2018. 
  2. "How JNU video helped BJP's Kapil Dev Sharma win bypoll in riot-hit Muzaffarnagar". Network 18. 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.
  3. "Old meets new in riot shadow: 'pro-minority' seen as anti-national". http://indianexpress.com/article/india/india-news-india/muzaffarnagar-riot-jnu-up-elections-old-meets-new-in-riot-shadow-pro-minority-seen-as-anti-national/. 
  4. 4.0 4.1 4.2 "Muzaffarnagar Election Results 2017". elections.in. பார்க்கப்பட்ட நாள் 10 November 2018."Muzaffarnagar Election Results 2017". elections.in.
  5. https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS2414.htm?ac=14
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில்_தேவ்_அகர்வால்&oldid=3846003" இலிருந்து மீள்விக்கப்பட்டது