கபீர் புரஸ்கார் விருது
கபீர் புரஸ்கார் விருது என்பது இந்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.[1]
நோக்கம்
தொகுசமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் ஒரு விருதாகும். ஒரு சாதி, இனம், வகுப்பை சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பை சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களின் உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றுவோரின் உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுத்தொகை
தொகுமூன்று வகையான ப் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்திய ரூபாயில் முதலாம் நிலையில் 20,000, இரண்டாம் நிலையில் 10,000, மூன்றாம் நிலையில் 5,000 என வழங்கப்படுகிறது. கூடவே பொருத்தமான மேற்கோளுடன் சான்றிதழும் வழங்கப்படுகிது.
தகுதிகள்
தொகுஆயுதப்படைகள், காவல் படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு துறையினர்கள் , அரசு ஊழியர்கள் கடமையின் ஒரு பகுதியாக இல்லாமல், பொது மக்களான அனைத்து பாலினத்தினருக்கும், இந்திய குடிமக்களும் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
ஆபத்தான சூழ்நிலையின் போது ஒரு உயிர்களை பாதுகாக்க ஒருவரின் தைரியமான நேர்மையான செயல்பாடுகளுக்காகவும், வகுப்புக் கலவரத்தின் போது மற்றொரு சமூகத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கை மற்றும் சொத்தை பாதுகாக்கப்பவர்களுக்கோ, சாதி மோதல்களின் போது மற்றொரு சாதியின் உறுப்பினர்களின் உயிரையோ சொத்தையோ பாதுகாப்பவர்களுக்கும், இன மோதல்களின் போது மற்றொரு இனக்குழுவின் உறுப்பினர்களின் உயிரையும் சொத்தையும் காப்பாற்றுதற்காவும், இந்திய உள்துறை அமைச்சகத்தால் இவ்விருது வழங்கப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ https://mha.gov.in/schemes இந்திய உள்துறை அமைச்சகம்/Kabir Puraskar schemes