கப்பால்துர்கா

கப்பால்துர்கா (Kabbaldurga) என்பது கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டையாகும். பெங்களூரிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் இக்கோட்டை உள்ளது.[1] 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டியத் தலைவரான முராரி ராவ் கோர்படே ஐதர் அலியால் தோற்கடிக்கப்பட்டு இக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் இருந்த கூட்டி நகரத்தை கோர்படே தன் கட்டுப்பட்டில் வைத்திருந்தார். கிபி 1776 ஆம் ஆண்டில் ஐதர் அலி இவரை தோற்கடித்தார். கோர்படே இறக்கும் வரை கபால்துர்கா கோட்டையில் வைக்கப்பட்டார்.[2] முராரி ராவ் சரணடைந்ததால் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இந்தக் கோட்டைக்குள் அனுப்பப்பட்டார்.[3] பிரித்தானிய பேரரசின் போது குற்றவாளிகள் இந்த கோட்டை உச்சியிலிருந்து தண்டனையாக தூக்கி எறியப்பட்டனர்.[4] இது பெங்களூருக்கு அருகில் இருப்பதால், இது ஒரு விருப்பமான மலையேற்ற இடமாக உள்ளது. ஒப்பீட்டளவில் எளிதான மலையேற்றமாகவும் இரவு மலையேற்றமாகவும் தனியார் குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது.[1] கோட்டையின் உச்சியில் உள்ள பழைய மற்றும் இடிந்து விழும் கட்டிடங்கள் சிறை, காவல்படை, வெடிமருந்து சேமிப்பு கிடங்கு ஆகியவற்றைக் குறிக்கின்றன மற்றும் பீமலில்ங்கேசுவரா மற்றும் கபாலம்மா கோவிலின் சிறிய கோயில்கள் இங்குள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Datta, Sravasti (16 February 2016). "Trek Thrills". தி இந்து. https://www.thehindu.com/features/metroplus/travel/Trek-thrills/article14082578.ece. 
  2. Srinivasaraju, Sugatha (26 July 2010). "Monitor's Hold". Outlook. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
  3. Prashanth, K.C. (2003). "Haidar and Trichinolopally in the Writings of C.Hayavadana Rao". The Quarterly Journal of the Mythic Society (Bangalore, India) 94 (3-4): 189. https://books.google.com/books?id=yQFuAAAAMAAJ&q=kabbaldurga+murari. பார்த்த நாள்: 2 August 2018. 
  4. "The Miraculous Shakthi Goddess of Kabbalu Village – Shree Kabbalamma!". Citykemp.com. 25 November 2017. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பால்துர்கா&oldid=3793298" இலிருந்து மீள்விக்கப்பட்டது