இராமநகரம்
இராமநகரம் (Ramanagara) இந்திய மாநிலமானகர்நாடகாவிலுள்ள ஒரு நகரமும், நகராட்சி மன்றமாகும். இது இராமநகரம் மாவட்டத்தின் தலைமையகமாகும். இது பெங்களூரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்து மற்றும் தொடர் வண்டி பொது போக்குவரத்தும் உள்ளது. பெங்களூரிலிருந்து சுமார் 90 நிமிடங்களில் நகரை அணுகலாம்.
இராமநகரம்
ರಾಮನಗರ பட்டு பள்ளத்தாக்கு | |
---|---|
நகராட்சி | |
அடைபெயர்(கள்): சில்க் சிட்டி | |
ஆள்கூறுகள்: 12°43′23″N 77°17′10″E / 12.723°N 77.286°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | இராமநகரம் |
அரசு | |
• வகை | நகரத்தந்தை |
• நிர்வாகம் | நகராட்சி |
ஏற்றம் | 747 m (2,451 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 95,167 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கேஏ-42 |
இணையதளம் | https://ramanagara.nic.in/en/ |
பிரபல பாலிவுட் திரைப்படமான சோலே 1975 ஆம் ஆண்டில் இந்நகரைச் சுற்றியுள்ள இராமகிரி மலைகள் என்று அழைக்கப்படும் மலைகளில் படமாக்கப்பட்டது. இதனால் இம்மலைக்களுக்கு 'சோலே ஹில்ஸ்' என்ற புனைப்பெயரும் உள்ளது.
திப்பு சுல்தானின் ஆட்சி காலத்தில் இந்த நகரம் ஷம்சராபாத் என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இராணுவத் தளபதி சர் பாரி குளோஸ் (1756-1813) என்பவருக்குப் பிறகு இது குளோஸ்பேட்டை என்று அழைக்கப்பட்டது. இந்த பெயர் நிலவியலில் தக்கவைக்கப்பட்டுள்ளது. பின்னர் இராமநகரம் என்று அழைக்கப்பட்டது. இராமநகரின் பெயர் இராமாயணத்தின் வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
புள்ளிவிவரங்கள்
தொகு2001 இந்திய census, இராமநகரத்தில் 79,365 மக்கள் தொகை இருந்தது.[1] இதன் மக்கள்தொகையில் ஆண்கள் 52%, பெண்கள் 48%. இராமநகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 63%, தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது: ஆண் கல்வியறிவு 67%, பெண் கல்வியறிவு 58%. இராமநகரில், 13% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
செப்டம்பர் 2007 இல் பெங்களூரு ஊரக மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இப்போது இது இராமநகர மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
தொகுஇராமநகரம் அதன் பட்டுப்புழு வளர்ப்புக்கு நன்கு அறியப்பட்டிருக்கிறது. மேலும் இது "சில்க் டவுன்" என்றும் "சில்க் சிட்டி" என்றும் பெயர் பெற்றது. இந்த பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு பிரபலமான மைசூர் பட்டுக்கான உள்ளீட்டை உருவாக்குகிறது. ஆசியாவில் பட்டுப்புழுக்களுக்கான மிகப்பெரிய சந்தையாகும். ஒரு நாளைக்கு 50 டன் பட்டுப்புழுக்கள் நகரத்திற்கு வந்து சேர்கிறது.[2] மேலும் இங்கு பெரிய அளவில் கிரானைட் தளங்களும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ Archive (2017-06-20). "cocoon market". தி இந்து. Archived from the original on 2011-05-29. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)