கமந்துர்க் கோட்டை

கமந்துர்க் கோட்டை (Kamandurg Fort) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் வசை-பிவண்டி சாலையில் அமைந்துள்ள கோட்டை ஆகும். இந்தக் கோட்டை பற்றி அதிகம் வெளித் தெரியவில்லை. கமந்துர்க் கோட்டையினை தேவகுண்டி கிராமத்திலிருந்து சுமார் 3 மணி நேரத்தில் நடந்து அடையலாம்.[1]

வரலாறு

தொகு

கமந்துர்க் கோட்டையைப் பற்றிய குறிப்பு 11ஆம் நூற்றாண்டின் "மகாகவ்டி பக்கரில்" காணப்படுகிறது, இது "கம்வந்தர்க்" என்று கூறுகிறது. கல்யாண் கிரீக் துறைமுகத்திலிருந்து உல்லாசு ஆற்றுன் வர்த்தகப் பாதையைப் பாதுகாப்பதற்காக இந்தக் கோட்டை கட்டப்பட்டது. 1683ஆம் ஆண்டில், சம்பாஜி மகாராஜ் இந்தக் கோட்டையை போத்துகீசியர்களிடமிருந்து வென்றார், பின்னர் 12 செப்டம்பர் 1685-இல் இவர்கள் இதை மீண்டும் வென்றனர். கோட்டையில் போதுமான தண்ணீர் இல்லாததால், போத்துகீசியர்கள் கோட்டையை கைவிட வேண்டியிருந்தது. 1737 பேஷ்வா-போர்த்துகீசிய போரின் போது, ​​சங்கர்ஜி கேசவ், கோட்டையை மறுசீரமைக்க பேஷ்வாக்களுக்கு கடிதம் எழுதினார்.[2]

அணுகல்

தொகு
  • திவா-வசை தொடருந்து பாதையில் உள்ள கமான் தொடருந்து நிலையத்தில் இறங்ககி பயணிக்கலாம்
  • பிவாண்டி-வசாய் சாலையில் பிவாண்டியிலிருந்து 22 கி. மீ. தொலைவில் கமான் உள்ளது.
  • மேற்கு இரயில்வேயில் உள்ள நைகான் நிலையத்திலிருந்து தானூந்தி பயணம் மூலம் கமான் கிராமத்தை அடையலாம்.

கமான் கிராமத்தின் ஒரு பாதை சிண்டிகேட் வங்கியைக் கடந்து பெல்குண்டி கிராமத்திற்குச் செல்கிறது. பெல்குண்டி பாதத்தை அடைய “பெல்குண்டி 1 கிமீ” என்று காட்டும் மைல்கல்லுக்கு அருகில் வலதுபுறம் திரும்ப வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. India. Ministry of Defence (1994). Sainik Samachar: The Pictorial Weekly of the Armed Forces, Volume 41. University of Michigan.
  2. http://trekshitiz.com/Ei/Kamandurg-Trek-Hill_forts-Category.html#google_vignette
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமந்துர்க்_கோட்டை&oldid=3934443" இலிருந்து மீள்விக்கப்பட்டது