கமலாலய புராணம்

கமலாய புராணம் என்பது தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் செய்யப்பட்ட நூல். கமலாலயம் என்பது திருவாரூர் கோயிலிலுள்ள குளத்தின் பெயர். கமலாலய புராணத்திற்கு ஆதி கமலாலய மகாத்மியம் என்னும் பெயரும் உண்டு. இதில் 24 சருக்கங்களும், 1066 பாடல்களும் உள்ளன.

இந்நூலில் சந்தப் பாடல்களும் மடக்கு நடையும் காணப்படுகின்றன. ஒவ்வொரு சருக்கத்தின் இறுதியிலும் நூலைக் கேட்டோர் எய்தும் பலன் கூறப்படுகிறது. திருவாரூர் சோழர் தலைநகரமாக விளங்கியது, மனுநீதிச் சோழன் ஆண்டது முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.

இந்த நூலிலுள்ள ஒரு பாடல்

ஆரியம் கற்று முற்றும் அறிவுடையாளர் வாழ்க
ஆரியம் தெரி துஞ்சாரும் அருந்தமிழ் ஆய்வார் வாழ்க
ஆரியம் தமிழ் ஆராயும் அதிமதி நிபுணர் வாழ்க
ஆரியம் தமிழ் ஆய்வார்க்கு அணுக்கரும் வாழ்க அன்பால்
  • இந்த நூல் எழுதப்பட்ட ஆண்டு கி. பி. 1546.

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலாலய_புராணம்&oldid=4164478" இலிருந்து மீள்விக்கப்பட்டது