கமலா மார்க்கண்டேய

கமலா மார்க்கண்டேய (1924—மே 16, 2004) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளரும் புதின ஆசிரியரும் ஆவார்.[1][2] மைசூரில் பிறந்த கமலா மார்க்கண்டேய சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாறு படித்தார். பத்திரிகையாளராகப் பணி புரியும் போதே சிறுகதைகள் எழுதினார். 1948 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு பெர்ட்ரான்ட் டெய்லர் என்னும் ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டார்[3].

இவருடைய முதல் புதினம் நெக்டர் இன் எ சீவ் 1954 ஆம் ஆண்டில் வெளிவந்தது. புலம்பெயர்ந்து வந்த இந்தியர்களின் அடையாளங்கள் தொடர்பான சிக்கல்கள் பற்றியும் கீழை நாடுகள் மற்றும் மேலை நாடுகள் இடையே நிலவும் விழுமியங்களின் வேறுபாடுகள் பற்றியும் இவருடைய புதினங்கள் விவரிக்கின்றன. கமலா மார்க்கண்டேய பத்துக்கும் மேல் புதினங்களை எழுதினார். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து சிலர் முனைவர் பட்டங்கள் பெற்றனர். இவர் தமது 80 ஆம் அகவையில் இலண்டனில் காலமானார்[4].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_மார்க்கண்டேய&oldid=3186874" இலிருந்து மீள்விக்கப்பட்டது