கமலா ஹம்பனா

கமலா ஹம்பனா (பிறப்பு: அக்டோபர் 28, 1935) இந்தியாவைச் சேர்ந்த சமண மத மற்றும் கன்னட மொழி எழுத்தாளர் ஆவார். இவர் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள தேவநஹள்ளியில் பிறந்தார். பேராசியரியராகவும், தொல்பொருட் படைப்புக்களை ஆய்வு செய்பவராகவும் பணியாற்றினார். கன்னட இலக்கியத்தில் பல விதமான தீவிர ஆய்வுகளை மேற்கொண்டார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

கமலா ஹம்பனா 1935 ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று கர்நாடகாவில் பெங்களூரு , தேவநஹள்ளியில் பிறந்தார்.இவர் சி.ரங்கடமநாயக்க மற்றும் லட்சும்மா தம்பதிகளுக்கு பிறந்தார். கமலாவின் தொடக்கப் பள்ளிக் கல்வி கர்நாடகாவின் சல்லகேரில் தொடங்கி வெவ்வேறு கிராமங்களில் தொடர்ந்தது. 1935 ஆம் ஆண்டில் தும்கூரில் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. இனை பூர்த்தி செய்தார். மைசூரில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். 1955-1958 ஆம் ஆண்டில் மைசூர் பல்கலைக்கழகத்தில் கன்னட மொழியில் இளங்கலைப் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[2][3]

கமலா ஹம்பனா கன்னடத்தில் ஒரு மூத்த எழுத்தாளர் ஹம்பா நாகராஜையாவை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.[2]

பணி தொகு

1959 ஆம் ஆண்டில் கமலா ஹம்பனா கன்னட ஆசிரியராகத் பணியைத் தொடங்கினார். பெங்களூரில் உள்ள விஜயநகரில் உள்ள அரசு முதல் தரக் கல்லூரியில் முதல்வராகவும், பின்னர் பெங்களூரு மகாராணி கல்லூரிகளிலும் , மைசூர் மகாராஜா கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சமண மதம் , இயற்கை ஆய்வுகள் துறை என்பவற்றில் கவனம் செலுத்தினார். மைசூர் பல்கலைக்கழகத் தலைவராகவும், ஹம்பி பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் வருகை பேராசிரியராகப் பணியாற்றினார். பெண் உணர்திறன் குறித்த அவரது ஆராய்ச்சி அவருக்கு மகத்தான புகழைப் பெற்றுத் தந்தது. சமணப் படைப்புக்களைப் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை அவரது படைப்புக்களில் காணலாம்.[2]

இலக்கியப் படைப்புகள் தொகு

கமலா ஹம்பனாவின் படைப்புகளில் பண்டைய கன்னட இலக்கியம் , சமணவியல் மற்றும் உரை விமர்சனம் ஆகியவை அடங்கும். அவர் கர்நாடகாவில் தலித் இயக்கம் மற்றும் பெண்கள் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார். கமலா இலக்கிய விமர்சனம், கவிதை, சிறுவர் இலக்கியம், புனைகதை மற்றும் சுயசரிதை போன்ற பல்வேறு வகை இலக்கியங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[4]

விருதுகள் தொகு

கமலா ஹம்பனா பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவையாவன:

கமலா ஹம்பனா 2003 டிசம்பரில் முட்பிட்ரியில் நடைபெற்ற 7 வது கன்னட சாகித்ய சம்மலனா (அகில இந்திய கன்னட இலக்கிய மாநாடு) தலைவராக இருந்தார்.[5]

கர்நாடக சாகித்ய அகாடமி விருது

கர்நாடக அரசின் கித்தூரு ராணி சன்னம்மா விருது (2019) [6]

தனச்சிந்தமணி அட்டிமாபே விருது

கர்நாடக அரசைச் சேர்ந்த ராஜ்யோத்ஸவ பிரசஸ்தி

பாபா அம்தே விருது

கன்னட சாகித்ய பரிஷத்தின் (2012) சவுந்தரய விருது

ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தில் (2008) நடோஜா கௌரவ டாக்டர் பட்டம்[7]

அனுபமா நிரஞ்சனா விருது (2003)

சித்தாந்த கீர்த்தி வித்வத் விருது (2013)

ராஷ்டிர காவி குவெம்பு விருது (2013)

குவேம்பு களவிகேதனா விருது

ரன்னா பிரசஸ்தி (1996)

டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் விருது (2007)

பாரத் விகாஸ் ரத்னா விருது

ஸ்ருதா சம்வர்தன் ராஷ்டிரேய புராஸ்கர்

மகாமஸ்தகாபிஷேகா ராஷ்டிரிய புராஸ்கரா

சந்தேஷா விருதுகள் (2017)[8]

சான்றுகள் தொகு

  1. Women Achievers of Karnataka, பார்க்கப்பட்ட நாள் 2019-12-03
  2. 2.0 2.1 2.2 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "KAMALA HAMPANA, b". www.shastriyakannada.org. Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  4. Staff (2003-02-21). "ಮೆಲ್ಲಗೇ ಗಟ್ಟಿ ಮಾತಾಡುವ ಡಾ। ಕಮಲಾ ಹಂಪನಾ". https://kannada.oneindia.com (in கன்னடம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03. {{cite web}}: External link in |website= (help)
  5. "Woman to Head Sahitya Sammelana?". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. "Hampi University convocation today". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  8. User, Super. "Sandesha Awards 2017 announced". Sandesha - A foundation for culture and education (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03. {{cite web}}: |last= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_ஹம்பனா&oldid=3547904" இலிருந்து மீள்விக்கப்பட்டது