கமலேசு சந்திர சக்கரவர்த்தி

கமலேசு சந்திர சக்கரவர்த்தி அல்லது கே. சி. சக்கரவர்த்தி (Kamalesh Chandra Chakrabarty 27 சூன் 1952) என்பவர்  இந்திய   ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்தவர். 2009 ஆம்   ஆண்டு சூன் 15 முதல் 2014 மார்ச்சு 20 வரை ஆளுநர் பதவியில் இருந்து பதவிக்காலம் முடிவதற்கு முன் பதவி விலகினார்.

பிறப்பும் படிப்பும்

தொகு

இந்திய விடுதலைக்குப் பிறகு கிழக்கு பாக்கிசுத்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த வங்கக் குடும்பத்தில் கே.சி. சக்கரவர்த்தி பிறந்தார். ஒரிசா மாநிலத்தில் கந்தமாலா என்ற ஊரில் பிறந்தார். பின்னர் வாரணாசி சென்று பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் புள்ளியியலில் முதுவர் பட்டமும் ஆய்வுப் பட்டமும் பெற்றார்.[1]

பணிகள்

தொகு

கே.சி.சக்கரவர்த்தி பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணி  செய்தார். அது மட்டுமல்லாமல் அங்கு ஆராய்ச்சியும் செய்தார். பின்னர் பாங்கு ஆப் பரோடா என்ற நாட்டுடைமை வங்கியில் பணியில் சேர்ந்து  26 ஆண்டுகள் பணியாற்றி பொது மேலாளர் என்ற பதவியை அடைந்தார்.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப்  பதவி ஏற்குமுன் இந்தியன் வங்கியில் தலைவராகவும் பின்னர் பஞ்சாப் நேசனல் வங்கியில் தலைவராகவும் பதவி ஏற்று பணி செய்தார்.[2]

பதவிகள் விவரம்

தொகு
  • பாங்க் ஆப் பரோடாவில் பொது மேலாளர் என்ற பதவியில் இருந்ததோடு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரிவில் முதன்மைச்  செயல் அதிகாரியாக 2001-2004 இல்  இருந்தார்.
  • 2004 இல் பஞ்சாப் நேசனல் வங்கியில் செயல் இயக்குநராக இருந்தார்.
  • 2005-2007 இல் இந்தியன் வங்கியில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பதவிகளில் இருந்தார்.
  • 2007-2009 இல் பஞ்சாப் நேசனல் வங்கியில்  தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்தார்.
  • 2009-2014 இல் ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநராக இருந்தார்.

ரிசர்வ் வங்கியில் செயல்பாடுகள்

தொகு

வங்கிகளின் விதிமுறைகளை அமுல்படுத்துவதிலும், மேற்பார்வையிடுதலிலும், வங்கி வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சிறு தொழில், குறுந்தொழில்களுக்கு நிதி வழங்குவதிலும்[3] மாநில கிராம வங்கிகளைச் சீரமைப்பதிலும் [4] கே.சி.சக்கரவர்த்தி தம் பங்களிப்பைச் செய்துள்ளார்.

மேற்கோள்

தொகு
  1. Sangita Mehta, ET Bureau Jun 20, 2012, 04.13AM IST (2012-06-20). "KC Chakrabarty: Regulator with a sense of humour – Economic Times". Articles.economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. Business Standard (2012-06-08). "K C Chakrabarty may get 2-yr extension as RBI dy governor". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14. {{cite web}}: |author= has generic name (help)
  3. "Apex bank to finalise report on sick units soon". Financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-16.
  4. "Press Information Bureau English Releases". Pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2013-01-16.