கமுதி சூரிய மின் திட்டம்

கமுதி சூரிய மின் திட்டம் (Kamuthi Solar Power Project) என்பது 2,500 ஏக்கர்கள் (10 km2) பரப்பில் நிறுவப்பட்டுள்ள ஒளிமின்னழுத்த மின் நிலையம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் இந்நிலையம் அமைந்துள்ளது.[1] இந்த திட்டத்தை அதானி பவர் குழுமம் நிறுவியுள்ளது.[2] ஒரு குறிப்பிட்ட பகுதியில் 648 மெகாவாட் மின் உருவாக்கும் திறன் கொண்ட, உலகின் 12வது பெரிய பெரிய திறன் கொண்ட சூரிய சக்தி பூங்காவாக இது உள்ளது.[3] [4]

கமுதி சூரிய மின் திட்டம்
Kamuthi Solar Power Project
கமுதி சூரிய மிந்திட்டம் கழுகுப் பார்வை
நாடுஇந்தியா
அமைவு9°20′51″N 78°23′32″E / 9.347568°N 78.392162°E / 9.347568; 78.392162
நிலைஇயக்கத்தில்
அமைப்பு துவங்கிய தேதிபெப்ரவரி 2016
இயங்கத் துவங்கிய தேதிமார்ச் 2017
அமைப்புச் செலவு4,550 கோடி (2020 இல் நிகர மதிப்பு 48 billion or US$600 மில்லியன்)
உரிமையாளர்அதானி பசுமை ஆற்றல்

13 ஜூன் 2016 அன்று சூரிய பூங்காவைத் தேசிய கட்டமைப்புடன் இணைக்க ஐந்து துணை நிலையங்களை ஏபிபி நியமித்தது.[5] [6] கமுதி சூரிய மின்சக்தி திட்டம் 21 செப்டம்பர் 2016 அன்று 4,550 கோடி (2020 இல் நிகர மதிப்பு 49 billion or US$610 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஆலையில் 2.5 மில்லியன் சூரிய தொகுதிகள், 380,000 அடித்தளங்கள், 27,000 மீட்டர் கட்டமைப்புகள், 576 மாறுமின் எதிர் மாற்றிகள், 154 மின்மாற்றிகள் மற்றும் கிட்டத்தட்ட 6,000 கி.மீ. கம்பி வடங்கள் நிறுவப்பட்டுள்ளன.[7] [8] சூரிய பதாகைகளைத் தாங்குவதற்குத் தேவையான கட்டமைப்புகளை நிர்மாணிக்க 30,000 டன் கால்வனேற்றப்பட்ட எஃகு தேவைப்பட்டது. இந்த திட்டத்தை 8 மாதங்களுக்குள் முடிக்க சுமார் 8,500 தொழிலாளர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 11 மெகாவாட் திறன் கொண்டதாக நிறுவினர்.

முழு சூரிய பூங்காவும் தமிழ்நாடு மின்பகிர்மான நிறுவனத்துடன் 400 கி.வி துணை மின்நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [9] சூரியசக்தி பலகைகள் சுய-மின்னேற்றம் செய்யப்பட்ட பொறியன்கள் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படுகின்றன.

இந்த கட்டமைப்பினைப் பயன்படுத்தி சுமார் 2100 kWh/(m2*yr) அடிப்படையில் வருடத்திற்கு 1.35 TWh/yr உற்பத்தி செய்யலாம்.[10] இந்த அமைப்பு சுமார் 25 ஆண்டு தொழில்நுட்ப ஆயுட்காலத்தினை கொண்டது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "India Builds World's Largest Solar Power Plant, Covering 2,500 Acres". CleanTechnica. Archived from the original on 11 September 2018. பார்க்கப்பட்ட நாள் 2017-03-20.
  2. PTI (15 March 2015). "Adani plans 1,000MW solar power plant at Ramanathapuram". Times of India. Archived from the original on 22 July 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  3. "World's largest solar project starts feeding electricity into national grid". Uniindia.com. 9 June 2016. Archived from the original on 28 April 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  4. "India unveils the world's largest solar power plant". Al Jazeera. Archived from the original on 31 December 2016. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
  5. PTI. "ABB links 648 MW solar project at Kamuthi with national grid". Economic Times. Archived from the original on 13 June 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  6. "ABB connects power to the Indian grid from one of the world's largest solar plants". Abb.com. Archived from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  7. "Adani dedicates to nation world's largest solar power plant in TN : The Hindu Business Line - Mobile edition". M.thehindubusinessline.com. Archived from the original on 23 September 2016. பார்க்கப்பட்ட நாள் 21 September 2016.
  8. The Hindu Business Line. "CDM: Adani dedicates to nation world's largest solar power plant in TN". Archived from the original on 23 September 2016. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016. {{cite web}}: |last= has generic name (help)
  9. Livemint. "CDM: Adani unveils world's largest solar plant in Tamil Nadu". Archived from the original on 22 September 2016. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
  10. "India Solar Resource - Global Horizontal Irradiance - Annual Average, by NREL, National Renewable Energy Laboratory". Archived from the original on 29 March 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமுதி_சூரிய_மின்_திட்டம்&oldid=3621473" இலிருந்து மீள்விக்கப்பட்டது