கம்பு உணவுகள்

(கம்பஞ் சோறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நவதானியங்கள் என அழைக்கப்படும் தானியங்களில் ஒன்றான கம்பு என்ற தானியத்தில் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் கம்பு உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் செய்யப்படுகின்ற கம்பஞ்சோறு, கம்பங்கூழ் போன்றவை மிகச் சிறந்த உணவுகளாகும். தமிழர்களின் ஆரோக்கியமான சத்து நிறைந்த உணவு கம்பஞ் சோறு. இதை நீரில் வேக வைத்து செய்யப்படும் உணவு பதார்த்தம் ஆகும். இச்சோற்றுக்கென, கம்பு உடைப்பில் தனி முறையே உள்ளது. அதன்படி, செய்தால் கம்பஞ்சோறு, குழையாமல் அரிசிச் சோற்றினைப் போலவே கொஞ்சம் தனித்தனியாக ஈரப்பதத்துடன் கிடைக்கும். இதனை 'கம்பஞ் சாதம்' என்றும் சொல்வர். இது தமிழர்களின் மிகப்பழமையான உணவாகும். இந்தக் 'கம்பஞ் சாதம்' பெரும்பாலும் மதிய நேரங்களில் உண்ணப்படுகிறது. இதை மோருடன் சேர்த்து உண்ணும் போது உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை உடையதால் வேளாண்மை செய்யும் மக்களே அதிகம் விரும்பி உண்கின்றனர். இரவு நேரங்களில் சூடாக குழம்புகளுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. கம்பு கூழ்,களி,அடை,தோசை, உருண்டை போன்ற பதங்களாகவும் செய்யப்படுகிறது. இப்பொழுது நகர்புறங்களில் கோடைக் காலங்களில் தள்ளுவண்டி கடைகளில் கூழாகவும் கிடைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பு_உணவுகள்&oldid=2139192" இலிருந்து மீள்விக்கப்பட்டது