கம்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கம்பு | |
---|---|
![]() | |
U.S. pearl millet hybrid for grain | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Poales |
குடும்பம்: | Poaceae |
துணைக்குடும்பம்: | Panicoideae |
பேரினம்: | Pennisetum |
இனம்: | P. glaucum |
இருசொற் பெயரீடு | |
Pennisetum glaucum (L.)R.Br. | |
வேறு பெயர்கள் | |
Setariopsis glauca (L.) Samp. |
கம்பு (ஒலிப்பு (உதவி·தகவல்)) ( Pennisetum glaucum, Pearl Millet) ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப்பயிர். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
சிறு தானியங்களில் கம்புக்கு முதலிடம் தொகு
அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.
கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள் தொகு
தானியங்களிலேயே அதிக அளவாக 11.8 சதவிதம் புரோட்டீன் கம்பில்தான் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.
100 கிராம் கம்பில்,
- 42 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது.
- 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
- பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
- ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
- நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கம்பு தொகு
இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது.கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.
கம்பு சேமிப்பு முறை தொகு
நன்கு உலர வைத்த கம்பு தானியம் சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். பின்னர் மீண்டும் ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் மேலும் 6 மாதங்கள் கெடாமல் இருக்கும். நொச்சி இலையை கம்புடன் கலந்து சேமித்தால், பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.
பாரம்பரிய முறையில் கம்பு சமையல் தொகு
- முதலில் கம்பை எடுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டுப் பின்னர் அந்தக் கம்பைத் தூய்மையான துணியில் பரப்பி வைத்து விடவும்.
- மேற்பரப்பிலுள்ள ஈரம் போனபின் கம்பை எடுத்து உரலில் இட்டு இலேசாகக் குத்தவும்.
- அதில் உமி நீங்கியதும் அதை முறத்தில் இட்டுப் புடைக்கவும்.
- பின்னர் மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தவும்.
- அதிலிருந்து பெரிய குருணை, சிறிய குருணை, மாவு ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும்.
- பின்னர் அடுப்பில் உலை வைத்து முதலில் பெரிய குருணையை இட்டு வேக வைக்கவும்.
- அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமாகும். அது வெந்தபின் சிறிய குருணையை அதனுடன் சேர்த்துக் கலக்கி வேக வைக்கவும்.
- அதுவும் வெந்தபின்னர் மாவினைப் போட்டுக் கலக்கவும்.
- குறிப்பிட்ட பதத்திற்கு வெந்தபின்னர் அடுப்பை அணைத்துவிட்டுப் பாத்திரத்தை அப்படியே சிறிது நேரம் மூடிவைக்கவும்.
- பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து உண்ணலாம்.
- மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
தொன்று தொட்டுக் கம்பில் செய்யப்பட்டு வருவது கம்பஞ்சோறு ஆகும். கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்பின் பழைய உணவு வகைகள்.
உடனடி உணவுக் கலவை தொகு
தற்காலத்தில் கம்பு உணவு அதிகம் சமைக்கப் படாததற்குக் காரணம், கம்பை உணவாக்குவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான். இக்குறைகளைப் போக்கி, எளிதாகக் கம்பு உணவினைத் தயாரிக்க, கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்மஞ்சோற்றுக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமை பெற்றுள்ளது.
கம்பின் பயன்பாடு தொகு
- கம்பிலிருந்து கூழ் தயாரிக்கப்படுகிறது.
- கம்பை இடித்து அதில் கம்பங்களி செய்யலாம்.
- கம்பைப் பயன்படுத்தி அடை செய்யலாம்.
மருத்துவ பயன்கள் தொகு
- உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது.
- வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.