கம்ப்யூட்டர் ருடே (இதழ்)

(கம்பியூட்டர் ருடே (சிற்றிதழ்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கம்ப்யூட்டர் ருடே இலங்கை கொழும்பிலிருந்து 2000ம் ஆண்டிலிருந்து வெளிவரும் ஒரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் ஆகஸ்ட் 2000ல் வெளிவந்தது.

கம்ப்யூட்டர் ருடே

பணிக்கூற்று

தொகு

இலங்கையில் முதலாவது தேசிய தமிழ் கணனிச் சஞ்சிகையான இச்சஞ்சிகையின் பனிக்கூற்றாக 'கணனிப் பிரியர்களின் கனவுச் சஞ்சிகை' எனும் வாக்கியம் அமைந்துள்ளது.

ஆசிரியர் பீடம்

தொகு

பிரதம ஆசிரியர்

தொகு
  • சி. அனுராஜ்

ஆசிரியர் குழு

தொகு
  • ம.அருள்குமரன்
  • ரா.நரேஸ்
  • சி.கிசோக்குமார்
  • சு.பிரதீப்

வெளியீடு

தொகு

ஆரம்ப காலகட்டத்தில் ரெலிகிரபிக் பப்ளிகேசன்ஸ், கம்பியூட்டர் ருடே 376 - 378 காலி வீதி வெள்ளவத்தை, கொழும்பு 06, இலங்கை எனும் முகவரியிலிருந்து வெளிவந்த இச்சஞ்சிகை தற்போது 359 கஸ்தூரியா வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியிலிருந்து வெளிவருகின்றது. 'உதயன் ஐ.ரி. ஐலன்ட்' நிறுவனம் இதனை வெளியிடுகின்றது.

முக்கியத்துவம்

தொகு

உலகளாவிய ரீதியில் 20ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் கணனி அறிமுகமானாலும்கூட, இலங்கையில் அதன் அறிமுகம் தாமதித்தே இடம்பெற்றது. தமிழ்மொழியில் கணனிப் பயன்பாடு குறித்து இலங்கையில் போதிய விளக்கங்களை வழங்குவதற்கான நூல்களோ, வழிகாட்டல்களோ குறைவாக இருந்த காலகட்டத்தில் தமிழ்மொழியில் இலங்கையில் வெளிவந்த முதல் மாத கணினி தமிழ் சஞ்சிகையாக இது காணப்படுகின்றது. வடக்கில் யுத்தம் காரணமாக சிறிது காலம் வெளிவராதிருந்த இவ்விதழ் 2005ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்தும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. 2011 டிசம்பர் இதழ் முதல் புதுப்பொழிவுடன் தரமான வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்டு வர்ண படங்களைக் கொண்ட உள்ளடக்கத்துடன் வெளிவருவது சிறப்பம்சமாகும்.

உள்ளடக்கம்

தொகு

கணனி பற்றி விரிவான ஆக்கங்களை இது கொண்டிருந்தது. குறிப்பாக கணனியின் தொழில்நுட்பங்கள், கணனி மென்பொருட்கள், கணனிப் பயன்பாடு, கணனிப் பயன்படுத்தப்படும்போது எழும் பிரச்சினைகள், வைரஸ் பாதுகாப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இச்சஞ்சிகையில் இடம்பெற்றிருந்தன. முதல் சஞ்சிகை 48 பக்கங்களைக் கொண்டிருந்தது. தொடர்ந்தும் 48 பக்கங்களுடனே இவ்விதழ் வெளிவந்துகொண்டிருக்கின்றது. கால மாற்றங்களுக்கேற்ப கணினித்துறையிலும் குறிப்பாக இணையத்துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை வாசகர்களுக்கு இலகு நடையில் தமிழ்மொழியில் விளங்க வைத்து தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

விலை

தொகு
  • ரூபாய் 50
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்ப்யூட்டர்_ருடே_(இதழ்)&oldid=4164495" இலிருந்து மீள்விக்கப்பட்டது