கம்போடியாவில் போக்குவரத்து

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கம்போடியாவில் போக்குவரத்து (Transport in Cambodia) போர் மற்றும் தொடர்ச்சியாக நடந்த சண்டைகளால் மிகவும் பழுதடைந்த போக்குவரத்து திட்டமாக இருந்தது. சண்டை இல்லாத காலத்தில் அவசரமாக போடப்பட்ட போதுமான வசதியும் வளர்ச்சியும் அடையாத சாலைகளாக அவை இருந்தன. நாட்டின் பல்வீனமான உள்கட்டமைப்பு வசதிகளால் அவசர மீட்பு உதவிகளைப் பெறுவதிலும் பொதுப் பொருட்களை கொள்முதல் மற்றும் விநியோகம் செய்வதில் மகத்தான இடர்பாடுகள் தோன்றின. போக்குவரத்து வலையமைப்பை மேம்படுத்தவும் பராமரிக்கவும் கம்போடியாவிற்கு சோவியத் உருசியாவின் தொழில்நுட்ப உதவியும் பொருள் உதவியும் கிடைத்தன.

கம்போடியாவின் தேசிய போக்குவரத்து வரைபடம்
தேசிய நெடுஞ்சாலை எண் 1 - கையன் சிவாய், கண்டால் மாகாணம்.
கம்போடியாவின் ஒரு கிராமபுறச்சாலை

நெடுஞ்சாலைகள்

தொகு
 
பாட்டம்பேங் விற்பனைக்கான பெட்ரோல் புட்டிகள்.
  • மொத்தம்l - 38,257 கி.மீ (2004)
  • செப்பனிட்டவை - 2,406 கி.மீ (2004)
  • செப்பனிடப்படாதவை - 35,851 கி.மீ (2004)

தற்போதுள்ள ஒட்டுமொத்த சாலைகளில் 50 சதவீத சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளே தார் சாலைகளாக நல்ல நிலையில் உள்ளன. சுமார் 50 சதவீத சாலைகள் நொறுக்கப்பட்ட கல், கற்கள், அல்லது மேம்படுத்தப்பட்ட மண்ணால் ஆன சாலைகளாக இருந்தது. மற்றும் மீதமுள்ள சுமார் 30 சதவீத சாலைகள் சற்றும் மேம்படுத்தப்படாமல் வழித்தடங்கள் என்ற நிலையைத் தாண்டி சற்று மேம்பட்ட சாலையாக இருந்தது. புனோம் பென்னில் இருந்து வியட்நாம் எல்லைக்குச் செல்லும் தேசியத் தடம் எண்1 இன் ஒரு பகுதியை பழுதுபார்த்து புதியசாலையாக 1981 ஆம் ஆண்டு கம்போடியா திறந்தது. போர் காலத்தில் மிகவும் பழுதடைந்திருந்த இச்சாலை வியட்நாமிய பொறியாளர்களால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1980 களின் பிற்பகுதியில் கம்போடியாவின் சாலைகள் தொழில் மையமாக்கப்படாமலும் விவசாயச் சங்கத்தால் பயன்படுத்தப்படாமலும் சாலை உருவாக்கப்பட்டதன் நோக்கம் எதுவும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. சரக்குந்துகளும், பேருந்துகளும் போதிய அளவுக்கு இல்லாமல் இருந்தது. இருந்த சில வண்டிகளுக்கு உதிரி உறுப்புகள் இல்லாததால் அவை ஓடும் நிலையில் இல்லாமலும் இருந்தன. நிதிச்சுமை காரணமாக சாலை போடுதலும் பராமரித்தலும் புறக்கணிக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து பாலங்களை இடித்து சாலைகளில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பில்லா நிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

2006 ஆம் ஆண்டில் கம்போடியாவின் பிரதான சாலைகள் யாவும் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டன. பெரும்பாலான சாலைகள் தற்பொழுது செப்பனிடப்பட்டுவிட்டன. தாய்லாந்து எல்லையில் பொய்பெட்டில் இருந்து சியெம் ரீப் (அங்கோர்வாட்) வரை செல்லும் பாதை தற் பொழுது அமைக்கப்பட்டு வருகிறது.

வரைபடம் 01/2014

தேசிய நெடுஞ்சாலை குறியீடு தோராயமான நீளம் தொடக்கம் சேருமிடம்
தேசிய நெடுஞ்சாலை 1 10001 167.10 கி.மீ புனோம் பென் பாவெட் - வியட்நாம் எல்லை
தேசிய நெடுஞ்சாலை 2 10002 120.60 கி.மீ புனோம் பென் புனோம் பென் - வியட்நாம் எல்லை
தேசிய நெடுஞ்சாலை 3 10003 202.00 கி.மீ புனோம் பென் காம்பொட் - வியேல் ரென்
தேசிய நெடுஞ்சாலை 4 10004 226.00 கி.மீ புனோம் பென் சிகானௌக் வில்லெ
தேசிய நெடுஞ்சாலை 5 10005 341.00 கி.மீ புனோம் பென் பாட்டம்பேங் - பொய்பெட் - தாய்லாந்து எல்லை
தேசிய நெடுஞ்சாலை 6 10006 416.00 கி.மீ சிகுவோன் சியெம் ரீப் - சிசுபோன் தேசிய நெடுஞ்சாலை 5
தேசிய நெடுஞ்சாலை 6ஏ 10006 ஏ 76.00 கி.மீ புனோம் பென் சிகுவோன்
தேசிய நெடுஞ்சாலை 7 10007 509.17 கி.மீ சிகுவோன் சிடங் திரெங் - லாவோசு எல்லை
தேசிய நெடுஞ்சாலை 8 10008 105.00 கி.மீ தே.நெ6ஏ - பிரெக் தமாக் மேம்பாலம் வியட்நாம் எல்லை - பொனியா கிரெக் தேசிய நெடுஞ்சாலை 7

தொடர்வண்டி பாதைகள்

தொகு

புனோம் பென்னில் இருந்து தொடங்கும் இரண்டு தொடர் வண்டிப் பாதைகள் இங்கு உண்டு. 1000 மி.மீ (3 அடி 3 3⁄8 அங்குலம்) அளவு கொண்ட குறுகிய ஒற்றைப் பாதை மொத்தமாக 612 கிலோமீட்டர் தொலைவை இணைக்கிறது. புனோம் பென்னையும் வியட்நாமையும்[1] இணைக்கின்ற மூன்றாவது பாதைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் சீனாவில் உள்ள குன்மிங் நகரங்களுடன் இணைக்கின்ற ஒரு பாதையும், புதிய வடக்கு – தெற்கு பாதையொன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

போரின் காரணமாக கவனிக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டும் வந்த தொடர்வண்டிப் பாதைகள் தற்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ளன. டிரான்சு-ஆசியன் தொடர்வண்டிப்பாதை திட்டமும் திட்டமிடப்பட்டு அனைத்து நவீன வகை தொடர் வண்டிகளையும் இயக்குவதற்கும் கம்போடியா திட்டமிட்டு வருகிறது[1]

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு