கம்மைட்டு (Gummite) என்பது யுரேனியத்தின் படிக உருவமற்ற கனிமங்களின் கலவையாகும். மஞ்சள் நிறத்திலுள்ள இக்கலவையில் யுரேனியத்தின் ஆக்சைடுகள், சிலிக்கேட்டுகள், நீரேற்றுகள் போன்றவை கலந்துள்ளன. யுரேனைட்டிலிருந்து இக்கனிமம் வழிப்பெறுதியாகப் பெறப்படுகிறது. கோந்து போன்ற ஒளிர்வைப் பெற்றிருப்பதால் இதற்கு கம்மைட்டு எனப் பெயரிடப்பட்டது.

பராகுவே தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள கம்மைட்டு கனிமத்தின் தொகுப்பு

மேலும், இக்கனிமம் கிடைக்கக் கூடிய வெவ்வேறு இடங்களைப் பொறுத்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. செருமன் நாட்டின் எலியாசு சுரங்கத்தில் கிடைக்கும் கனிமம் எலியாசைட்டு என்றும், சுப்பீரியர் ஏரியில் கிடைக்கும் கனிம வகை கோரசைட்டு என்றும் பிட்டினைட்டு, பெச்சூரன், உராங்கம்மிட், யுரேனோகம்மைட்டு என்று பலபெயர்களால் கம்மைட்டு அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கம்மைட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்மைட்டு&oldid=2758853" இலிருந்து மீள்விக்கப்பட்டது