கயா லால்
கயா லால் (Gaya Lal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் பல்வால் மாவட்டத்தில் உள்ள ஓடல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அரியானா சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.[1][2][3]
1967 ஆம் ஆண்டில் கயா லால் பதினைந்து நாட்களில் மூன்று முறை கட்சி மாறினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து சனதா கட்சிக்குச் சென்ற இவர் மீண்டும் காங்கிரசு கட்சிக்கு திரும்பி அடுத்த ஒன்பது மணி நேரத்திற்குள் மீண்டும் சனதா கட்சிக்கு மாறினார். கயா லால் ஐக்கிய முன்னணியில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர முடிவு செய்தபோது, காங்கிரசு தலைவர் இராவ் பிரேந்திர சிங் இவரை சண்டிகர் பத்திரிகைக்கு அழைத்து வந்து "ஆயா ராம் கயா ராம்" என்று அறிவித்தார். இது பல நகைச்சுவைகள் மற்றும் கேலிச்சித்திரங்களுக்குப் பொருளாக மாறியது. 1985 ஆம் ஆண்டில், இத்தகைய கட்சி விலகல்களைத் தடுக்க அரசியலமைப்பு திருத்தப்பட்டது. கயா லாலின் மகன் உதய் பன் தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரியானா பிரிவின் மாநிலத் தலைவராக உள்ளார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bhajan Lal: The artful manipulator
- ↑ 'Aaya Ram Gaya Ram' Haryana's gift to national politics
- ↑ In season of switching loyalties, Haryana remains true to trend
- ↑ "Bhupinder Hooda loyalist Uday Bhan named Haryana Congress chief". Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.