கயிலாசநாத மகாதேவர் சிலை
கயிலாசநாத மகாதேவர் சிலை (कैलाशनाथ महादेव) நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள சங்கா என்னும் ஊரில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய சிவன் சிலை ஆகும்.[1] 143 அடி உயரம் கொண்ட இச்சிலை நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டூவிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[2] சிலையின் கட்டுமானப் பணிகள் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு நிறைவடைந்தன. இச்சிலை தாமிரம், துத்தநாகம், சீமைக்காரை மற்றும் எஃகு ஆகியவற்றால் எழுப்பப்பட்டது. இச்சிலை பாமர மக்கள் வாழும் ஒரு மலைக்கிராமத்தில் அமைந்துள்ளது. ஆனால் சிலை எழுப்பபட்ட பின் அங்கு சுற்றுலா வளர்ச்சி அடைந்துள்ளதால் அம்மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது.
கயிலாசநாத மகாதேவர் சிலை | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 27°38′46″N 85°28′29″E / 27.646017°N 85.474774°E |
பெயர் | |
பெயர்: | கயிலாசநாத மகாதேவர் சிலை |
ஆங்கிலம்: | Kailashnath Mahadev Statue |
அமைவிடம் | |
ஊர்: | சங்கா |
மாவட்டம்: | பக்தபூர் |
நாடு: | நேபாளம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவபெருமான் |
வரலாறு | |
நிறுவிய நாள்: | 2003 |
கட்டப்பட்ட நாள்: | 2010 |
அமைத்தவர்: | கமல் ஜெயின் |
சமீபத்தில், சிலை எழுப்பப்பட்ட நிலப்பகுதி அரசுக்குச் சொந்தமானது என்று சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், நிர்வாகக் குழுவினர் சிலையை தரிசிக்கவும் வழிபடவும் மிகுதியான கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
சுற்றுலா
தொகுகயிலாசநாத மகாதேவர் சிலை உலகிலேயே மிகப்பெரிய சிவன் சிலையாக இருப்பதால் இதைக் காண பல்வேறு நாடுகளில் இருந்தும் நேபாளத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தினந்தோறும் சராசரியாக 5000 மக்கள் இச்சிலையைக் காண வருகின்றனர். இது நேபாள சுற்றுலா வளர்ச்சிக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
வடிவமைப்பு மற்றும் கட்டுமானம்
தொகுசிவபெருமான் நின்ற நிலையில் இடது கையில் திரிசூலமும், சடையில் பிறையும், கழுத்தில் நாகாபரணமும், உருத்திராட்சமும் அணிந்து அருள்பாலிப்பதைப் போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிலையின் கட்டுமானப் பணிகள் 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டன. மலைப்பகுதியில் கட்டப்படுவதால் 100 அடி அடித்தளத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டாலும் அதனால் சிலைக்கோ அல்லது அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் இச்சிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. பல தகுதிவாய்ந்த கட்டுமானப் பொறியாளர்களைக் கொண்டு இச்சிலை உருவாக்கப்பட்டது. வாரந்தோறும் இந்தியாவிலிருந்து தலைமைப் பொறியாளர் வந்து சிலையின் அமைப்பு சரியாக வடிவமைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nepal President to inaugurate 'world's tallest' Shiva statue". Zee News Website. 2010-06-12. Archived from the original on 2014-07-25. பார்க்கப்பட்ட நாள் February 27, 2012.
- ↑ "World's 'tallest' Shiva statute ready". Ekantipur Website. 2010-06-13. Archived from the original on 2012-05-13. பார்க்கப்பட்ட நாள் February 21, 2012.