கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான அந்தாதி வகையினது.

எழுதியவர் நக்கீரதேவ நாயனார்; காலம் 10-ஆம் நூற்றாண்டு. இதில் 100 வெண்பாக்கள் உள்ளன.

காளத்தியில் கைலையைக் கண்டவர் அப்பர். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு தோன்றியது இந்த நூல். இந்தத் தொடுப்பில் கைலை பற்றி ஒரு பாடலும், காளத்தி பற்றி அடுத்த பாடலும் என மாறி மாறிப் பாடல்கள் அமைந்துள்ளன.

பாடல்

தொகு

எடுத்துக்காட்டுக்கு இரண்டு வெண்பாக்கள் அந்தாதித் தொடையுடன்

கைலை
மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடை
ஏறி இழியும் இதுவல்லால் - தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது. பாடல் 25

கயிலையை ஏத்தினால் பிறப்பிருக்கை இல்லை.

காளத்தி
இனிதே பிறவி இனமரங்கள் ஏறி
கனிதேர் கடுவன்கள் தம்மின் - முனிவாய்ப்
பிணங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணி
வணங்கவல்லார் ஆயின் மகிழ்ந்து. பாடல் 26

காளத்தியைப் பேணுவார்க்கு என்றும் மகிழ்ச்சி.

கைலை
மகிழ்தலரும் வண்கொன்றை ... பாடல் 27

காலம் கணித்த கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005