கரணவாய்

கரணவாய் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இதன் எல்லைகளாக கரவெட்டி, உடுப்பிட்டி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இக்கிராமம் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது.

வயல்களும் பனைமரங்களும் தோட்டங்களும் நிறைந்த ஊரான இதன் பெரும்பாலான மக்கள் விவசாயப் பின்னணி கொண்டவர்கள். இதன் ஒருபுறம் வல்லை வெளியானது அமைந்திருக்கின்றது. அதனூடாக செல்லும் தொண்டைமானாறு இக்கிராமத்தின் எல்லையை தொட்டுச் செல்கின்றது.

இங்கு பிறந்தவர்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரணவாய்&oldid=2651976" இருந்து மீள்விக்கப்பட்டது