கராச்சி பெருநகர மாநகராட்சி
கராச்சி பெருநகர மாநகராட்சி (உருது: بلدیہَِ عظمیٰ کراچی) என்பது பாகிஸ்தானின் பெரிய மாநகரமான கராச்சியில் உள்ளாட்சி அமைப்ப்பின்படி சேவைகளை வழங்குவதற்கான ஒரு உள்ளாட்சி மற்றும் மாநகராட்சியை ஆளும் அமைப்பாகும்.
கராச்சி பெருநகர மாநகராட்சி بلدیہ عظمی کراچی | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1933 |
முன்பு | Karachi Municipal Corporation |
தலைமை | |
காலியிடம் | |
காலியிடம் | |
உறுப்பினர்கள் | 308 |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2015 |
கூடும் இடம் | |
City Council Hall | |
வலைத்தளம் | |
www |
வரலாறு
தொகு1852
தொகு1846 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது கராச்சியில் காலரா தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த கராச்சி பாதுகாப்பு வாரியம் நிறுவப்பட்டது. 1852 இல் இந்த வாரியம் கராச்சி நகராட்சி ஆணையமாக மேம்படுத்தப்பட்டது.
1853
தொகு1853 இல் முனிசிபல் கமிஷன் கராச்சி மாநகராட்சி ஆணையமாக மாற்றப்பட்டது. கராச்சி மாநகராட்சி கட்டிடத்தின் அடிக்கல் 1927 இல் பந்தர் சாலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
1933
தொகு1933 இல் கராச்சி நகராட்சி ஆணையம் கராச்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
1976
தொகுகராச்சி மாநகராட்சி 1976 இல் கராச்சி பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்டது.
1987
தொகுகராச்சி பெருநகர மாநகராட்சி மண்டலக் குழுக்கள் 1987 இல் நிறுவப்பட்டன. மண்டல குழுக்கள் மீண்டும் கராச்சி பெருநகர மாநகராட்சியில் இணைக்கப்பட்டன. அருகாமையில் இருந்த ஐந்து மாவட்ட மாநகராட்சிகள் 1987 இல் நிறுவப்பட்டன.
2000
தொகுகராச்சி பெருநகர மாநகராட்சி 2000 இல் மாற்றி அமைக்கப்பட்டும் மற்றும் ஐந்து மாவட்ட மாநகராட்சிகள் அனைத்தும் கராச்சி மாநகர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கராச்சி நகர மாவட்டம் 18 நகரங்கள் மற்றும் 178 ஒன்றிய கவுன்சில்களாக பிரிக்கப்பட்டது.
2011
தொகு2011 இல் சிந்து அரசு மீண்டும் கராச்சி பெருநகர மாநகராட்சி மற்றும் ஐந்து மாவட்ட மாநகராட்சிகளை மீட்டெடுத்தது.
2015
தொகு2015 ஆம் ஆண்டில், கராச்சி பெருநகரக் கழகமானது 209 பொது உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் 96 ஒதுக்கப்பட்ட உறுப்பினர்கள் உட்பட 305 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
1979 முதல் KMC ஆலோசகர் உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்வருமாறு [1]
வ.எண் | ஆண்டு | மேயர்கள் | வார்டு உறுப்பினர்கள் |
---|---|---|---|
1 | 1884 | 32 | |
2 | 1910 | 36 | |
3 | 1933 | ஜாம்சேது நசர்வஜ்ஜி மேத்தா | 57 |
4 | 1979-1983 | அப்துல் சத்தர் ஆஃகனி (மேயர்) | 166 |
5 | 1983-1987 | அப்துல் சத்தர் ஆஃகனி (மேயர்) | 232 |
6 | 1988-1992 | பஃரூக் சத்தர் (மேயர்) | 77 |
7 | 2001-2005 | முகமது டாரிக் ஹஸன் (CDGK) | 255 |
8 | 2006-2010 | நஸ்ரீன் ஜலில் (CDGK) | 255 |
9 | 2016-2020 | வஷீம் அக்தர் (மேயர்) | 308 |
கராச்சி பெருநகர மாநகராட்சி
தொகுஇந்த மாநகராட்சி தான் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நகரங்களுல் ஒன்றாகும். இந்தியாவில் மிகப்பெரிய மாநகராட்சி மும்பை. மும்பை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 228. ஆனால் கராச்சி மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 308 ஆகும். உலகின் பதின்மூன்றாவது பெரிய நகரமும் இதுவே ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Jamal, Rashid (2019). "Comparative Analysis of Municipal Powers in Karachi" (in en). Pakistan Perspective 24 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:2707-899X. https://journal.psc.edu.pk/index.php/pp/article/view/372.