கரிதுங்கா சுரங்கம்

நேபாளத்தில் உள்ள ஒரு சுரங்கம்

கரிதுங்கா சுரங்கம் (Kharidhunga mine) நேபாளத்தில் காணப்படும் உலகத்தின் மிகப்பெரிய மக்னீசியச் சுரங்கங்களில் ஒன்றாகும். நேபாள நாட்டின் கிழக்கில் இயனக்பூர் மண்டலத்தில் இச்சுரங்கம் அமைந்துள்ளது.[1] கரிதுங்கா சுரங்கத்தில் 180 மில்லியன் டன் 88% மக்னீசியத் தாது இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

கரிதுங்கா சுரங்கம்
Kharidhunga mine
அமைவிடம்
பாக்மதி ஆறு
நாடுநேபாளம்
உற்பத்தி
உற்பத்திகள்மக்னீசியம்

தோலாகா-சிந்துபால்சுவாக் கயிற்றுப் பாதை

தொகு

தோலாகா-சிந்துபால்சுவோக் கயிற்றுப் பாதை கரிதுங்காவில் உள்ள மாக்கல் மற்றும் மக்னீசியம் சுரங்கத்தை நேபாளத்தில் உள்ள லமோசங்குவில் உள்ள தொழிற்சாலையுடன் இணைக்கும் ஓர் இயங்கு கயிற்றுப் பாதையாகும்.[2] சிந்துபால்சோக் மற்றும் தோலகா ஆகிய இரண்டு மாவட்டங்களைக் கடந்து செல்லும் நேபாளத்தின் மிக நீளமான கயிற்றுப் பாதைகளில் இதுவும் ஒன்றாகும். டால்க் எனப்படும் மாக்கல் தொழிற்சாலை தெற்காசியாவில் 3 ஆவது பெரிய மாக்கல் தொழிற்சாலையாக இருந்தது.[3]

கயிற்றுப் பாதை 10.3 கிலோமீட்டர் (6.4 மைல்) நீளம் கொண்டதாகும். இப்பாதை 1990 ஆம் ஆண்டுகளில் செயல்பாட்டில் இருந்தது. ஆனால், பின்னர் மூடப்பட்டது. கரிதுங்கா, தௌதாலி, தேகன்பூர் மற்றும் லமோசங்கு கிராமங்கள் வழியாக இப்பாதை பயணிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Mineral deposits of Nepal". ngs.org.np. 2012. Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.
  2. "Kharidhunga Mine, Dolakha District, Province No. 3, Nepal". www.mindat.org.
  3. "3rd Largest Talc Plant in South Asia with 10.30 KMTR Ropeway : Dolakha - Sindhupalchok - Nepal". June 22, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிதுங்கா_சுரங்கம்&oldid=4105653" இலிருந்து மீள்விக்கப்பட்டது