கரிமபொலோனியம் வேதியியல்
கரிமபொலோனியம் வேதியியல் (Organopolonium chemistry) கார்பனும் பொலேனியமும் வேதிப் பிணைப்பால் பிணைந்து உருவாகும் பல்வேறு வேதிச் சேர்மங்களின் தொகுப்பு மற்றும் பண்புகளை விவரிக்கிறது.
பொலோனியம் அதிக கதிரியக்கத் தன்மை கொண்ட தனிமம் ஆகும், பொதுவாக 210Po என்ற ஐசோடோப்பு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அரை ஆயுட்காலம் சுமார் 138 நாட்களாகும். கரிமபொலோனியம் வேதியியல் முற்றிலும் ஆராயப்படாத ஒரு பிரிவாகவே உள்ளது. பெரும்பாலும் பொலோனியத்தின் ஆற்றல்மிக்க ஆல்பா சிதைவின் மூலம் சுய அழிவு மற்றும் சேர்மங்களை எரிக்கும் பண்பு காரணமாக சுவடு-நிலை ஆய்வுகளில் மட்டுமே உள்ளது. [1] C–Te மற்றும் C–Se பிணைப்புகளைக்காட்டிலும் C–Po பிணைப்பு பலவீனமானதாகும்.
அந்த பிணைப்புகளுடனான சேர்மங்கள் முறையே தனிமநிலை தெலூரியம் மற்றும் செலீனியம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக காலப்போக்கில் சிதைந்துவிடும். [2] மரபார்ந்த வேதியியல் முறைகளைப் பயன்படுத்த முடியாததால் இத்தகைய சேர்மங்களை அடையாளம் காண்பது பெரும்பாலும் பொருள்களைப் பகுத்துப் பார்க்கும் நிறவரைவியல் முறையைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஒத்த தெலூரியம் சேர்மங்களை அடிப்படையாகக் கொண்டு இவை அடையாளம் காணப்படுகின்றன. 210Bi- ஐசோடோப்பைக் கொண்டுள்ள கரிமபிசுமத் சேர்மங்களின் பீட்டா சிதைவிலிருந்தே சில கரிமபொலோனியம் சேர்மங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இம்முறை பாதுகாப்பானதாக இல்லை. [2][3]
நன்கு வரையறுக்கப்பட்ட வழிப்பெறுதிகளும் ஈரல்கைல், ஈரரைல் பொலோனைடுகள் (R2Po), மூவரைல் பொலோனியம் ஆலைடுகள் (Ar3PoX) மற்றும் ஈரரைல்பொலோனியமீராலைடுகளாக (Ar2PoX2) கட்டுப்படுத்தப்படுகின்றன. [2][3] 2,3-பியூட்டேன்டையால், தயோயூரியா போன்ற கொடுக்கிணைப்பு முகவர்களுடன் சேர்ந்து பொலோனியம் கரையக்கூடிய சேர்மங்களாகவும் உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 786. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Zingaro, Ralph A. (2011). "Polonium: Organometallic Chemistry". Encyclopedia of Inorganic and Bioinorganic Chemistry. John Wiley & Sons. p. 1–3. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781119951438.eibc0182.
- ↑ 3.0 3.1 Murin, A. N.; Nefedov, V. D.; Zaitsev, V. M.; Grachev, S. A. (1960). "Production of organopolonium compounds by using chemical alterations taking place during the β-decay of RaE". Dokl. Akad. Nauk SSSR 133 (1): 123–125. http://www.mathnet.ru/links/d4bd811f2ded6e2b1d67f43a93e2910e/dan23789.pdf. பார்த்த நாள்: 12 April 2020.