கரிமாபாத்து மீனா சந்தை
பாக்கித்தானிலுள்ள ஒரு சந்தை
கரிமாபாத்து மீனா சந்தை (Meena Bazaar, Karimabad) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகராமான கராச்சி நகரத்தில் அமைந்துள்ள ஒரு சந்தையாகும்.[1] குல்பெர்க்கு நகரின் கரிமாபாத்து பகுதியில் இது அமைந்துள்ளது. 1974 ஆம் ஆண்டில் இது திறக்கப்பட்டது.[2]
இது பெண்களை மையமாகக் கொண்ட கடைத் தெருவாகும். பெண்களுக்கான ஆடைகள், பெண்களுக்கான நவநாகரீக கடைகள், உணவகங்கள் மற்றும் சில ஆண்கள் உடை கடைகள் ஆகியவை இங்குள்ளன.[2] அருகில் ஒரு விளையாட்டு உபகரணங்கள் சந்தையும் உள்ளது. திருமண நிகழ்வுகள் மற்றும் இசுலாமியப் பண்டிகைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு பெண்களின் கைகள் அலங்காரம் செய்வதற்குத் தேவையான பல நகச்சாயம் மற்றும் மருதாணி கடைகளும் உள்ளன.[2]
மீனா சந்தை கராச்சியில் கலாச்சார ஆர்வமுள்ள இடங்களைத் தேடும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meena Bazaar retains its original charm". The Express Tribune. October 6, 2010.
- ↑ 2.0 2.1 2.2 Khan, Manal (July 9, 2015). "Colours and conversation at Meena Bazaar". DAWN.COM.