கரிம செலீனோசயனேட்டுகள்

வேதிச் சேர்மங்களின் ஒரு வகை

கரிம செலீனோசயனேட்டுகள் (Organic selenocyanates) என்பவை RSeCN என்ற பொதுவான மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம செலீனியம் சேர்மங்களாகும். பொதுவாக இவை நிறமற்றவைகளாகும். காற்றில் நிலைத்திருக்கும் திடப்பொருள்களாக இவை உள்ளன. விரும்பத்தகாத நாற்றம் கொண்ட நீர்மங்களாகவும் இவை காணப்படுகின்றன. கட்டமைப்பு, தயாரிப்பு மற்றும் வினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், செலீனோசயனேட்டுகளும் தயோசயனேட்டுகளும் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன.

தயாரிப்பு

தொகு

ஆல்க்கைல் செலீனோசயனேட்டுகள் பொதுவாக பொட்டாசியம் செலீனோசயனேட்டை ஆல்ககால் அல்லது அசிட்டோன் கரைசலில் ஆல்கைல் ஆலைடுகளுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அரைல் செலீனோசயனேட்டுகள் பொதுவாக பொட்டாசியம் செலீனோசயனேட்டை அரைல் ஈரசோனியம் உப்புகளுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படுகின்றன.[1]

வினைகள்

தொகு

கரிம செலீனோசயனேட்டுகள் ஒடுக்கவினையின் மூலம் செலீனால்களாக குறைக்கப்படுகின்றன. இவை எளிதாக இருசெலீனைடுகளாக ஆக்சிசனேற்றமடைகின்றன:

RSeCN + 2 e → RSe + CN
RSe + H+ → RSeH
2 RSeH + 0.5 O2 → RSeSeR + H2O

செலீனோசயனேட்டுகளை ஆக்சிசனேற்றம் செய்தால் செலீனிக் அமிலம் கிடைக்கும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 E. Bulka (1977). "Selenocyanates and Related Compounds". In Saul Patai (ed.). Cyanates and Their Thio Derivatives: Part 2, Volume 2. PATAI'S Chemistry of Functional Groups. pp. 619–818. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470771532.ch3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470771532.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிம_செலீனோசயனேட்டுகள்&oldid=3778994" இலிருந்து மீள்விக்கப்பட்டது