கரிம தையோசயனேட்டுகள்
கரிம தையோசயனேட்டுகள் (Organic thiocyanates) என்பவை RSCN என்ற வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள அனைத்து கரிமச் சேர்மங்களையும் குறிக்கும். இந்த கரிம வேதி வினைக்குழு கந்தகத்துடன் இணைந்திருக்கும். R−S−C≡N கட்டமைப்பில் ஒரு S–C ஒற்றைப் பிணைப்பும் ஒரு C≡N முப்பிணைப்பும் இடம்பெற்றிருக்கும்.[1]
கரிம தையோசயனேட்டுகள் மதிப்புமிக்க கட்டுமானத் தொகுதிகளாகும். பல்வேறு கந்தகம் கொண்ட வேதி வினைக்குழுக்களையும் சாரக்கட்டமைப்புகளையும் இவை திறமையாக அணுக அனுமதிக்கின்றன.[2]
தயாரிப்பு
தொகுகரிம தையோசயனேட்டுகள் தயாரிப்புக்கான பல தொகுப்பு வழிகள் உள்ளன. அவற்றில் ஆல்கைல் ஆலைடுகள் மற்றும் கார தையோசயனேட்டுகள் ஆகியவற்றுக்கு இடையே நடைபெறும் வினை மிகவும் பொதுவானதாகும்.[3] ஐசோபுரோப்பைல் புரோமைடுடன் கொதிக்கும் எத்தனாலில் உள்ள சோடியம் தையோசயனேட்டை சேர்த்து சூடுபடுத்தினால் ஐசோபுரோப்பைல் தையோசயனேட்டு உருவாகும் வினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.[4] இந்த பாதையின் முக்கிய சிக்கல் ஆல்கைல் ஐசோதையோசயனேட்டு உருவாக்கம் ஆகும். இவை ஐசோதையோசயனேட்டு வழித்தோன்றல்களைக் கொடுக்க முனைகின்றன.
சில கரிம தையோசயனேட்டுகள் கரிமகந்தகச் சேர்மங்களின் சயனேற்ற வினையின் மூலம் உருவாக்கப்படுகின்றன. சல்பீனைல் குளோரைடுகளும் (RSCl) தையோசல்பேட்டுகளும் RSSO3−) கார உலோக சயனைடுகளுடன் வினைபுரிந்து முறையே குளோரைடு மற்றும் சல்பைட்டின் இடப்பெயர்ச்சியுடன் தையோசயனேட்டுகளைக் கொடுக்கின்றன.
அரைதையோசயனேட்டுகள் பெரும்பாலும் தையோசயனோசனேற்றம் மூலம் பெறப்படுகின்றன. அதாவது தையோசயனோசனின் வினைமூலம் பெறப்படுகின்றன. எலக்ட்ரான் மிகு அடி மூலக்கூறுகளுக்கு இந்த வினை சாதகமானதாக இருக்கும்.[1]
வினைகள்
தொகுகரிம தையோசயனேட்டுகள் இரைம்சுநேடர் தையோகார்பமேட்டு தொகுப்பு வினையில் தையோகார்பமேட்டுகளாக நீராற்பகுப்பு செய்யப்படுகின்றன.
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 R. G. Guy (1977). "Syntheses and Preparative Applications of Thiocyanates". In Saul Patai (ed.). Cyanates and Their Thio Derivatives: Part 2, Volume 2. PATAI'S Chemistry of Functional Groups. pp. 619–818. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470771532.ch2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470771532.
- ↑ Castanheiro, Thomas; Suffert, Jean; Donnard, Morgan; Gulea, Mihaela (2016-02-01). "Recent Advances in the Chemistry of Organic Thiocyanates". Chem. Soc. Rev. 45 (3): 494–505. doi:10.1039/c5cs00532a. பன்னாட்டுத் தர தொடர் எண்:1460-4744. பப்மெட்:26658383.
- ↑ "Synthesis of thiocyanates".
- ↑ R. L. Shriner (1931). "Isopropyl Thiocyanate". Organic Syntheses 11: 92. doi:10.15227/orgsyn.011.0092.