கருங்காலி

தாவர இனம்
(கருங்காலி மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கருங்காலி (Diospyros ebenum - இலங்கைக் கருங்காலி) என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன.

கருங்காலியில் செய்யப்பட்ட இலங்கை யானை மரக்கடைச்சல்

பயன்பாடுகள்

தொகு

இந்தக் கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலிப் பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகைகள் கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்ட பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றைய பலகைகள் பெறுவதில்லை. [1]

உலகின் விலைமதிப்புள்ள மரங்களில் ஒன்றாக ஆப்பிரிக்க கருமரம் (African blackwood), சந்தன மரம், செந்தந்த மரம் (pink ivory), அகில் மரம் ஆகியவற்றின் வரிசையில் கருங்காலி திகழ்கிறது.[2][3]

காட்சியகம்

தொகு

இலங்கையில்

தொகு

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வடமத்திய மாகணத்திலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கருங்காலி மரங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் மிகவும் அரிதான அல்லது அழிந்துவரும் மரங்களில் இதுவும் ஒன்றாகும்.

  1. "10 Karungali wood benifits". karungali.co.in. 21 Feb 2024. பார்க்கப்பட்ட நாள் 26 September 2022.
  2. "Top 10 Most Expensive Woods in the World". Salpoente Boutique. 18 November 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
  3. "11 Most Expensive Woods in the World". Ventured. 22 July 2020. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்காலி&oldid=3916769" இலிருந்து மீள்விக்கப்பட்டது