காழ்வை

(அகில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காழ்வை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malvales
குடும்பம்:
Thymelaeaceae
பேரினம்:
Aquilaria
இனம்:
A. malaccensis
இருசொற் பெயரீடு
Aquilaria malaccensis
Lamk.
வேறு பெயர்கள்

A. agallocha[2][3],
A. secundaria[2][3],
A. malaccense[3],
Agalochum malaccense[3]

அகில் (ஒலிப்பு) அல்லது காழ்வை (Aquilaria malaccensis) என்பது முதன்மையாக அதன் கட்டைகளுக்காகப் பெரு மதிப்பு மிக்கதாகக் கருதப்படும் தாவர இனம் ஒன்றாகும். இது வங்காளதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், லாவோசு, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. இது வளரும் இடங்களின் இழப்புக் காரணமாக இது அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[4] திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில் மரமாகும்.[5]

பயன்பாடு

தொகு

அகில் நறுமணப் பொருள்களின் தயாரிப்புக்காகப் பெறப்படும் அகிற்கட்டைகளின் (Agarwood) முதன்மையான வளப்பொருள் ஆகும்.[6] இதன் தண்டுப் பகுதியின் சுரப்பான அகிற் பிசின் நறுமணமானது ஆகும்.[2] உண்மையில் அகிற் பிசின் சுரக்கப்படுவது கரிய பூஞ்சண வகையொன்று இம்மரங்களைத் தொற்றுகையில் அதனை எதிர்ப்பதற்கான விளை பொருளாகவேயாகும்.[7]

உலகின் விலைமதிப்புள்ள மரங்களில் ஒன்றாக ஆப்பிரிக்க கருமரம் (African blackwood), கருங்காலி, செந்தந்த மரம் (pink ivory), சந்தன மரம் ஆகியவற்றின் வரிசையில் அகில் திகழ்கிறது.[8][9]

இலக்கியம்

தொகு

காழ்வை என்னும் மலர் சங்க காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[10]

காழ் என்னும் சொல் தமிழில் வயிரத்தைக் குறிக்கும். வயிரம் என்பது ஓரறிவுப் பயிரினத்தில் காணப்படும் கெட்டித் தன்மை. அகக் காழ் கொண்டவற்றை மரம் என்றும், புறக் காழ் கொண்டவற்றைப் புல் என்றும் பழந்தமிழர் பாகுபடுத்துகின்றனர்.[11]

பொதுவாகப் பூக்கள் மென்மையானவை. காழ்வை என்னும் பூவோ வன்மையானது. வளைந்து கொடுக்காதது. காழ்வை என்னும் சொல் அகில்-கட்டையைக் குறிக்கும்.[12] மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்படும் குறிஞ்சிப்பாட்டு மலர்களில் பூ இல்லாத சந்தனமர இலையும் ஒன்றாவது போல அகில்-மர இலைக்கொம்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

அகில் கள்ளியில் விளையும் நறுமணப் பொருள் (நான்மணிக்கடிகை).[13][சான்று தேவை]
கள்ளி வெயிலில் வெடித்து அகில் துகள்கள் அதிலிருந்து கொட்டும் (கம்பராமாயணம்)[14]

உசாத்துணை

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. Harvey-Brown, Y. (2018). "Aquilaria malaccensis". IUCN Red List of Threatened Species 2018: e.T32056A2810130. doi:10.2305/IUCN.UK.2018-1.RLTS.T32056A2810130.en. https://www.iucnredlist.org/species/32056/2810130. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. 2.0 2.1 2.2 Broad, S. (1995) "Agarwood harvesting in Vietnam" TRAFFIC Bulletin 15:96
  3. 3.0 3.1 3.2 3.3 Anonymous (November 2003) "Annex 2: Review of Significant Trade: Aquilaria malaccensis" Significant trade in plants: Implementation of Resolution Conf. 12.8: Progress with the Implementation of Species Reviews (CITES PC14 Doc.9.2.2) Fourteenth meeting of the Plants Committee, Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora, Windhoek, Namibia
  4. Barden, Angela (2000) Heart of the Matter: Agarwood Use and Trade and CITES Implementation for Aquilaria malaccensis [1] பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் TRAFFIC International, Cambridge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85850-177-6
  5. https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-agil-maram
  6. Ng, L.T., Chang Y.S. and Kadir, A.A. (1997) "A review on agar (gaharu) producing Aquilaria species" Journal of Tropical Forest Products 2(2): pp. 272-285
  7. formerly Phialophora parasitica Crous, P. W. et al. (1996) "Phaeoacremonium gen. nov. associated with wilt and decline diseases of woody hosts and human infections." Mycologia 88(5): pp. 786–796
  8. "Top 10 Most Expensive Woods in the World". Salpoente Boutique. 18 November 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
  9. "11 Most Expensive Woods in the World". Ventured. 22 July 2020. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
  10. குறிஞ்சிப்பாட்டு 93
  11. தொல்காப்பியம் மரபியல் 86, 87
  12. பாட்டும் தொகையும், பதிப்பாசிரியக் குழு, வெளியிட்டோர் எஸ். ராஜம், 1958
  13. கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும்; மான்வயிற்றுள்
    ஒள்ளரி தாரம் பிறக்கும்; பெருங்கடலுள்
    பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்,
    நல்லாள் பிறக்கும் குடி? (நான்மணிக்கடிகை 4)

  14. பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
    தாய் பிளந்து உக்க கார் அகில்களும் (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம் பாடல் 8)

"https://ta.wikipedia.org/w/index.php?title=காழ்வை&oldid=3853602" இலிருந்து மீள்விக்கப்பட்டது