கருஞ்சேனை (Black Shirts) என்பது இத்தாலியின் பாசிச துணை இராணுவ அமைப்பாகும். முதல் உலகப் போர், மற்றும் இரண்டாம் உலகப்போரில் இப்படையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் தேசிய பாதுகாப்பு இராணுவ சேவை என்ற அமைப்பிலும் செயல்பட்டனர்.[1][2][3]

கருஞ்சேனையரின் சின்னம்

பெயர்க் கராணம் தொகு

இத்தாலியின் வரலாற்று நாயகனாக போற்றப்படுகிற ஜியூசெப் கரிபால்டியின் செஞ்சேனைகளின் செயல்பாடுகளில் கொண்ட ஈர்ப்பால் பெனிட்டோ முசோலினி இந்த கருஞ்சேனை என்ற இராணுவ அமைப்பை தன் அரசியல் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க உருவாக்கினார். இதன் அங்கத்தினர்களாக துணை இராணுவத்தினர், அறிவாற்றல் மிக்க தேசியவாதிகள், முன்னால் இராணுவ அதிரடிப் படைவீரர்கள், சிறு நில விவசாயிகள், தொழிற் சங்கத்தினர் இருந்தனர்.

செயல்பாடுகள் தொகு

இப்படையினர் முசொலினியின் செல்வாக்கை உயர்த்த கொடுரச்செயல்கள், குழுப்பாலியியல் வன்செயல்கள், பயமுறுத்தல், போன்ற செயல்களை முசோலினியை எதிர்ப்பவர்களிடம் புரிந்தனர். இவர்களையுடைய புதிரான செயல்களில் ஒன்றான உணவு பழக்கம் கேஸ்டர் எணைணெயை குடிப்பது, இவர் அமைப்பினரின் உடையைப் பார்த்து இவரிடம் நட்பு பாராட்டிய இட்லர் அவருடைய நாசி ஜெர்மனி இராணுவத்துக்கும் இந்த உடையை மாதிரியாக வைத்து பழுப்பு நிறத்தில் (Brown Shirts) சீறுடை வழங்கினார். கருஞ்சேனை அமைப்பு முசோலினி இறக்கும் வரை செயல்பட்டது பின் கலைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Bosworth, R.J.B. (2005). Mussolini's Italy: Life Under the Fascist Dictatorship, 1915–1945 (Penguin Books), p. 117.
  2. Del Boca, Angelo (2007). Il gas di Mussolini. Il fascismo e la guerra d'Etiopia. Editori riuniti. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788835958598. https://books.google.com/books?id=mT8_AQAAIAAJ. 
  3. The Blackshirt Division Order of Battle comes from "Storia delle Unità Combattenti della MVSN 1923-1943" by Ettore Lucas and Giorgio de Vecchi, Giovanni Volpe Editore 1976 pages 63 to 116 plus errata.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருஞ்சேனை&oldid=3889836" இலிருந்து மீள்விக்கப்பட்டது